For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர எப்படியாச்சும் உலக கோப்பை இந்திய அணியில் சேர்க்கணும்.. திரும்ப, திரும்ப பேசும் முன்னாள் கேப்டன்

மும்பை: ரிஷப் பன்ட் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான கருத்து என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு பிறகு... உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைக்க காத்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் அதற்கான வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றன.

நியூசிலாந்து அணி நிர்வாகமானது, 15 பேர் கொண்ட அணியினை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்திய அணிகளும் விரைவில் அணியை அறிவிக்க இருக்கின்றன.

இதனால் தான் சிஎஸ்கே வெற்றியை குவிச்சுக்கிட்டு இருக்கு.. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டீபன் பிளெம்மிங்! இதனால் தான் சிஎஸ்கே வெற்றியை குவிச்சுக்கிட்டு இருக்கு.. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டீபன் பிளெம்மிங்!

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் வீரர்கள் ஆடிவருகின்றனர். குறிப்பாக டெல்லி அணியில் ஆடும் ரிஷப் பன்ட், பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு விக்கெட் கீப்பிங்கிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்படுகிறார்.

கண்டிப்பாக இருப்பார்

கண்டிப்பாக இருப்பார்

அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அணியில் ரிஷப் பன்ட் கண்டிப்பாக இருப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அந்த அணியின் ஆலோசகர் கங்குலியும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.

கருத்து சொன்ன பாண்டிங்

கருத்து சொன்ன பாண்டிங்

இந்நிலையில், மீண்டும் ரிஷப் பன்ட் குறித்து பாண்டிங் கருத்து கூறியுள்ளார். அவர் தெரிவித்து இருப்பதாவது: ரிஷப் பன்ட் உலக கோப்பை அணியில் எடுக்கப் பட வேண்டும் என்பதே எனது கருத்து.

அதிக ரன்கள் வேண்டும்

அதிக ரன்கள் வேண்டும்

முதலில் ஐபிஎல்லில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி அதிக ரன்களை அடிக்க வேண்டும். அப்படி செய்தால் உலக கோப்பை அணியில் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 3, 2019, 13:24 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
Rishabh Pant will make it to World Cup squad, says confident DC coach Ricky Ponting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X