For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மா தொண, தொணன்னு பேச்சுதான்… வேற ஒண்ணும் காணோம்… ரிஷப் பண்ட்டை தாளிக்கும் ரசிகர்கள்

Recommended Video

கிடைத்த வாய்ப்புகளை வீணடித்த ரிஷப் பண்ட்- வீடியோ

மொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி போட்டியில், பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வெற்றியை தாரை வார்த்த ரிஷப் பண்ட் மைதானத்தில் பேசியபடியே இருந்தது ரசிகர்ளை கடுப்பேற்றி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி போட்டி தோல்வி பேசப்பட்டது... பேசப்பட்டு கொண்டே இருக்கிறது... இனியும் பேசப்படும். அந்தளவுக்கு இந்திய ரசிகர்களை தூக்கம் வராமல் பாடாய்படுத்தி விட்டது.

அந்த போட்டியில் தோனிக்கு பதிலாக களமிறங்கியவர் ரிஷப் பண்ட். இளம்வீரர். அவரின் செயல்பாடு மைதானத்தில் நேரில் பார்ப்பவர்களையும் விட டிவி பெட்டி முன்பு குவிந்தவர்களையும் உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டார்.

வாய்ப்புகள் அளிப்பு

வாய்ப்புகள் அளிப்பு

உலக கோப்பை அணிக்காக கிட்டத்தட்ட 90 சதவீதம் அணி வீரர்கள் யார், யார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. எஞ்சிய வீரர்களுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாற்று விக்கெட் கீப்பர்

மாற்று விக்கெட் கீப்பர்

உலக கோப்பைக்கான அணியில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் ரொம்ப அவசியமாக தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கு தான் அணி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் தருகிறது.

நம்பிக்கை போனது

நம்பிக்கை போனது

அந்த வாய்ப்பையும், நம்பிக்கையையும் தமது செயல்பாட்டால் கெடுத்துக் கொண்டார். 3 போட்டிகளில் தோனி இருந்ததால் அவர் விக்கெட் கீப்பராக முடியவில்லை.

பிசிசிஐ வாய்ப்பு

பிசிசிஐ வாய்ப்பு

கடைசி 2 போட்டிகளில் தல தோனியை உட்காரவைத்து விட்டு ரிஷப் பண்டிற்கு சான்ஸ் கொடுத்தது பிசிசிஐ. விளைவு... பொறுப்பற்ற செயல்பாடு... அதன் எதிரொலியாக தோல்வி.

தவறுகள் செய்த ரிஷப்

தவறுகள் செய்த ரிஷப்

பேட்டிங் ஓரளவு இருந்தாலும்... விக்கெட் கீப்பிங் பல்லளித்துவிட்டது. பேட்ஸ் மேன் அடிக்காமல் மிஸ் செய்த பந்துகளை கைகளில் பவுண்டரிக்கு போகட்டும் என்று விட்டார். 39வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்பை ஸ்டம்பிங் செய்யாமல் தவற விட்டார்.

ஸ்டம்பிங் போனது

ஸ்டம்பிங் போனது

44வது ஓவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் டர்னரை ஸ்டம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டார். எளிமையான அந்த ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷப் தவறவிட்டதுதான் திருப்புமுனை. அதன்பின்... எழுச்சியுற்ற டர்னர் அணியை டரியலாக்கினார்.

தொண, தொண பேச்சு

தொண, தொண பேச்சு

ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தாமல் சதா பேசிக்கொண்டே இருந்திருக்கிறார் ரிஷப் பண்ட். குறிப்பாக சாஹல், குல்தீப், கேதர் ஆகிய ஸ்பின் பவுலர்கள் பந்துவீசும்போது ஒரே தொணதொணப்பு.

ஸ்ட்ம்ப் மைக்

ஸ்ட்ம்ப் மைக்

ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசியது அப்படியே கேட்டது. பொதுவாக.... பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளில் தான் இதுபோன்ற தொண, தொணப்புகள் இருக்கும். அந்த தருணத்தில் தான் ரசிகர்களுக்கு தோனியின் நினைவு வந்து, வந்து சென்றிருக்கிறது.

தொடரும் பேச்சு

தொடரும் பேச்சு

ரிஷப் பண்ட் ஆலோசனை என்ற பெயரில் அதிக பிரசங்கமாக பேசி பவுலர்களையும், ரசிகர்களையும் கடுப்பேற்றி விட்டிருக்கிறார். தோனி இல்லாத நேரத்தில் பவுலர்களுக்கு ஆலோசனை வழங்குவதை தவிர்த்து விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

ரசிகர்கள் வெறுப்பு

ரசிகர்கள் வெறுப்பு

மொகாலி போட்டியில் பவுலர்களை மட்டுமல்ல... டிவியில் பார்த்த ரசிகர்களையும் உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டார். வர்ணனையாளர்களின் குரல்களை தாண்டு, இவரது குரல் தான் சுருதி பேதமில்லாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஆட வேண்டும்

ஆட வேண்டும்

ஆக மொத்தத்தில் பேச்சை குறைத்து, அணியின் வெற்றிக்கு காரணமாக அமையும் வகையில் இனி ரிஷப் பண்ட் விளையாட வேண்டும். இல்லையெனில் போட்டியின் போது மைதானங்களும், அணிகளும் மாறும்... தோல்வி மட்டும் மாறாத ஒன்றாகிவிடும்.

Story first published: Monday, March 11, 2019, 18:26 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
Rishabh pants action in field irritated fans in stadium and television viewers too.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X