நம்பவே முடியவில்லை.. நேற்று கூட காரில் சென்றோம்.. டீன் ஜோன்ஸ் அகால மரணம்.. மனம் உடைந்த ஆர்.ஜே பாலாஜி

மும்பை: டீன் ஜோன்ஸ் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், உடைந்து போனேன் என்று ஐபிஎல் வர்ணனையாளர் ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் டீன் ஜோன்ஸ் இன்று மும்பையில் காலமானார். ஐபிஎல் வர்ணனைக்காக மும்பையில் தங்கி இருந்த அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இவர் 1984-1994 வரை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீன் ஜோன்ஸ்

டீன் ஜோன்ஸ்

இந்த நிலையில் டீன் ஜோன்ஸ் மரணம் தற்போது கிரிக்கெட் உலகை பெரிய அளவில் புரட்டி போட்டு உள்ளது. முக்கியமாக இந்திய கிரிக்கெட் உலகில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் என்றாலும் வர்ணனை காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடன் மிகவும் நெருக்கமாக பழகி இருந்தார்.

நெருக்கமாக பழகி வருகிறார்

நெருக்கமாக பழகி வருகிறார்

இந்தியாவை தன்னுடைய இரண்டாவது வீடு போல இவர் அணுகினார். 2005ல் இவர் இந்திய அணிக்கு கோச் ஆக கூட முயன்றார். அந்த அளவிற்கு இவர் இந்திய அணி மீதும், இந்தியா மீதும் மதிப்பு கொண்டாவர். சில சேனல்கள் இவரை தடை செய்த போது கூட, தொடர்ந்து இந்திய அணியின் போட்டிகள் பலவற்றில் இவர் வர்ணனை செய்துள்ளார்.

ஐபிஎல் வர்ணனை

ஐபிஎல் வர்ணனை

தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனை செய்வதற்காக இவர் மும்பை வந்து இருந்தார். மும்பையில் தங்கி இருந்தவர் இன்று மாரடைப்பு காரணமாக பலியானார். இந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகம் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் டீன் ஜோன்ஸ் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் துடிப்பான, உற்சாகமான வர்ணனையை நாங்கள் மிஸ் செயவோம். அவரின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி

அதேபோல் சக ஐபிஎல் வர்ணனையாளர் ஆர்ஜே பாலாஜி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.. டீன் ஜோன்ஸ் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உடைந்து போனேன். வாழ்க்கைதான் எளிதாக உடைந்து போக கூடியது. நேற்று கூட நாங்கள் காரில் ஒன்றாக பயணம் செய்து கொண்டு இருந்தோம்.

நேற்று இரவு

நேற்று இரவு

நேற்று இரவு ஒன்றாக பயணம் செய்தோம். இப்போது அவர் காலமாகிவிட்டார் என்கிறார்கள். இது உண்மையா என்று எங்களால் நம்ப கூட முடியவில்லை. உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வோம், என்று டீன் ஜோன்ஸ் குறித்து ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RJ Balaji condolences for the death of Former Australian player Dean in Mumbai.
Story first published: Thursday, September 24, 2020, 17:01 [IST]
Other articles published on Sep 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X