ரஞ்சி கோப்பையில் ராபின் உத்தப்பா ஹாட்ரிக் சதம்.. டிராவிட் சாதனை சமன்

பெங்களூர்: ரஞ்சி கோப்பை தொடரில் ராபின் உத்தப்பா தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசியுள்ளார். இதன்மூலம், ராகுல் டிராவிட்டின் ஒரு சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

ரஞ்சி கோப்பையில், கர்நாடக அணிக்காக ராபின் உத்தப்பா விளையாடி வருகிறார். ஹூப்ளி நகரில் தொடங்கிய, குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், டெல்லி-கர்நாடக அணிகள் மோதி வருகின்றன. இதில் ராபின் உத்தப்பா, 148 ரன்கள் குவித்தார். ரஞ்சி தொடரில் இது உத்தப்பாவின் 17வது சதமாகும். கர்நாடகாவுக்காக ராகுல் டிராவிட் 17 சதங்கள் அடித்திருந்த நிலையில், அதை உத்தப்பா சமன் செய்துள்ளார்.

கர்நாடகாவுக்காக 26 சதங்கள் விளாசிய முன்னாள் வீரர், பிரிஜேஷ் பட்டேல் அம்மாநில ரஞ்சி வீரர்களில் முதலிடத்திலுல்ளார். டிராவிட் 48 போட்டிகளிலேயே 17 சதங்களை கடந்தார். உத்தப்பாவுக்கு 90 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது.

நடப்பு ரஞ்சி தொடரில் ராஜஸ்தான், ஒடிசா ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் விளாசிய, உத்தப்பா, தொடர்ந்து 3வது சதத்தை பதிவு செய்து ஹாட்ரிக் செஞ்சுரி விளாசியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Karnataka's Robin Uthappa equalled Rahul Dravid's record in Ranji Trophy when he hit his 3rd consecutive century, on Monday (November 23).
Story first published: Tuesday, November 24, 2015, 18:21 [IST]
Other articles published on Nov 24, 2015
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X