உத்தப்பாவின் 12 வருட ஆசை... நிறைவேற்றுவாரா எம்.எஸ்.தோனி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை: சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டு இருக்கும் மூத்த வீரர் உத்தப்பா, தோனி குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

2021 ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை அணி வழக்கம் போல மூத்த வீரர்களையே அதிகளவில் ஏலம் எடுத்துள்ளது.

அந்தவகையில் சி.எஸ்.கேவால் மூத்த வீரர் ராபின் உத்தப்பா வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை அணி குறித்தும், தோனி குறித்தும் உத்தப்பா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சி.எஸ்.கே ஏலம்

சி.எஸ்.கே ஏலம்

ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது.கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை.

இதனால் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரூ.3 கோடிக்கு உத்தப்பா வாங்கப்பட்டார்.

 மூத்த வீரர்

மூத்த வீரர்

ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபின் உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சென்ன சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும். இவர் தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் நன்றாக ஆடி வருகிறார்.

வைரல் வீடியோ

வீடியோ வெளியிட்டுள்ள உத்தப்பா, வணக்கம் சென்னை எப்படி இருக்கீங்க. எனக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, இது கொஞ்சம் லேட்டுன்னாலும், லேட்டஸ்ட்டா சொல்லியிருக்கேன்னு நினைக்குறேன். எனக்கு விசில் அடிக்க தெரியாது ஆனா நீங்க விசில் அடிக்கிற மாறி விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

ஆசை

ஆசை

தோனி குறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, நான் தோனியுடன் விளையாடி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருடன் இணைந்து ஒரு தொடரை வெல்ல வேண்டுமென்ற ஆர்வத்துடன் உள்ளேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Robin utthappa message to Csk fans, video goes viral
Story first published: Sunday, February 21, 2021, 17:29 [IST]
Other articles published on Feb 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X