For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இத கேட்டீங்களா..? பும்ரா பவுலிங்ல ராக்கெட் சயின்சே இருக்கு.. ஐஐடி புரொபசர் கண்டுபிடித்த மேஜிக்

மும்பை: வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணியில் அதிகம் கவனம் பெற்ற வீரராக இருந்தவர் பந்து வீச்சாளர் பும்ரா. பல போட்டிகளில் அவரின் பங்களிப்பு, மும்பை வெற்றி பெற காரணமாக அமைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ராவின் பந்து வீச்சு என்று சொல்லலாம். சென்னைக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் பும்ரா.

2 மணி நேரம் 25 நிமிட போராட்டம்... ஜோகோவிச்சை வீழ்த்தி ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியனானார் நடால் 2 மணி நேரம் 25 நிமிட போராட்டம்... ஜோகோவிச்சை வீழ்த்தி ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியனானார் நடால்

பும்ராவின் ரசிகன்

பும்ராவின் ரசிகன்

மும்பை கேப்டன் ரோகித்தும் பும்ரா எங்கள் சொத்து என பாராட்டினார். ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் , தான் இந்திய பந்து வீச்சாளர் பும்ராவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.

பேராசிரியர் விளக்கம்

பேராசிரியர் விளக்கம்

இந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சில சமன் பாடுகளை முன்வைத்து விளக்கமும் கூறியுள்ளார்.

மேக்னஸ் விளைவு

மேக்னஸ் விளைவு

அவர் கூறியிருப்பதாவது: பும்ரா வீசும் பந்துகளில் ஆராய்ச்சி செய்த போது பல முக்கிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. அவர் பந்து வீசும் போது அதன் வேகம், அப்போது அவரின் உடல் வடிவ நிலை, பந்து சுழன்று செல்லும் விதம் எல்லாம் சேர்ந்து மேக்னஸ் விளைவு ஏற்படுகிறது.

எதிரணியினர் திணறல்

எதிரணியினர் திணறல்

அதன் மூலம் பும்ரா வீசும் பந்தின் கீழ்நோக்கிய விசையானது துல்லியமாக முடுக்கி விடப் படுகிறது. அதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க முடியாமல் திணறுகின்றனர். பந்துகளும், திடீரென பவுன்சர்களாக மாறவும் இதுவே காரணம் என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 20, 2019, 15:58 [IST]
Other articles published on May 20, 2019
English summary
Rocket science is behind Bumrah’s bowling says IIT Professor Sanjay Mittal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X