For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தாதாவின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்...? இன்னும் 46 ரன்கள் தான் பாக்கி

டெல்லி:ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தொடக்க வீரர் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா,ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை முடிவு செய்யும் கடைசி போட்டி, இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இரு அணிகளும் 2க்கு 2 என சமநிலை வகிப்பதால் இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே கோப்பையை கைப்பற்றும்.

இதற்கிடையே, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான, ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்கள் என்னும் இலக்கை அடைய உள்ளார். அதற்காக, அவருக்கு இன்னும் 46 ரன்களே தேவை.

சாதனை படைப்பாரா?

சாதனை படைப்பாரா?

அதுமட்டுமல்லாமல், அவர் இப்போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்து விடுவார். கங்குலி தனது 200வது இன்னிங்ஸில் தான் 8000 ரன்களை கடந்தார்.

ரோகித் 200

ரோகித் 200

அதேபோன்று, இன்று 200வது இன்னிங்சில் ரோகித் களமிறங்குகிறார். எனவே, அந்த சாதனை பட்டியலில் அவர் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கோலி முதலிடம்

கோலி முதலிடம்

எட்டாயிரம் ரன்களை மிகக்குறைந்த இன்னிங்ஸில் கடந்தவர்கள் பட்டியலில், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி(175 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ்(182 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

சாதிக்க வாய்ப்பு

சாதிக்க வாய்ப்பு

ரோகித் சர்மா இந்த தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் பெரிதாக ரன் குவிக்க தவறினார். ஆனால், கடைசியாக மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் தவானுடன் சேர்ந்து அவர் அதிரடியாக 95 ரன்கள் எடுத்தார். எனவே இந்த ஆட்டத்தில அவர் நிச்சயம் சாதிப்பார் என்று நம்பலாம்.

Story first published: Wednesday, March 13, 2019, 9:32 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
Rohit Sharma has an opportunity to enter in the elite club by achieving a milestone of 8000 runs- he is just 46 runs away from achieving this feat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X