For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துவக்க வீரரா வேகமா 1000 ரன்களை அடிச்சுருக்காரு ரோகித் சர்மா... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதனை!

அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 49 ரன்களை அடித்து அவுட்டானார். இதை தொடர்ந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

ஆயினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்துள்ள துவக்க வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்ட போதிலும் இன்றைய இந்திய அணியின் ஆட்டத்திற்கு சிறப்பாக கைகொடுத்துள்ளார்.

1000 ரன்களை எட்டிய துவக்கவீரர்

1000 ரன்களை எட்டிய துவக்கவீரர்

இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000 ரன்களை எட்டியுள்ளார் ரோகித் சர்மா. மேலும் 1000 ரன்களை எட்டியுள்ள முதல் துவக்க வீரர் என்ற பெருமையும் அவருக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. அவரை டேவிட் வர்னர் மற்றும் டீன் எல்கன் ஆகியோர் இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் தொடர்கின்றனர்.

ஆசிய வீரர் என்ற பெருமை

ஆசிய வீரர் என்ற பெருமை

மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுக தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை குவித்த ஆசிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்திய வீரர் ரஹானே 1068 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார். மேலும் மார்னஸ் லாபுஸ்சாக்னே 1675 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார். அவரை ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் முறையே 1341 மற்றும் 1301 ரன்களுடன் தொடர்கின்றனர்.

தொடரும் ரோகித் சர்மா

தொடரும் ரோகித் சர்மா

இதுவரை 19 இன்னிங்ஸ்களில் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார் மயங்க் அகர்வால். அதிவேக ரன்கள் சாதனையில் அவரை தொடர்கிறார் ரோகித் சர்மா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 5, 2021, 18:04 [IST]
Other articles published on Mar 5, 2021
English summary
Rohit Sharma becoming the fastest Asian to 1000 runs in the inaugural edition of the ICC World Test Championship
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X