அதிரடி, நிதானம்
மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ராகுலின் பதற்றத்தை தணித்தார். ராகுல் நிதனமாக விளையாட மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ரன் சீராக உயர்ந்தது.
ரோகித் 140
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ரோகித் 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரி விளாசி 140 ரன்கள் குவித்தார். போட்டியில் 3 சிக்சர் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் சிக்சர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சிக்சரில் சாதனை
இந்திய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் தோனியும், ரோகித்தும் 355 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது, ரோகித் 358 சிக்சர்கள் விளாசி தோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
24 சதங்களில் சாதனை
மேலும் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்களில் சச்சின் சாதனையையும் ரோகித் முறியடித்துள்ளார். சச்சின் 219 போட்டிகளில் 24 சதம் அடித்தார். ஆனால், ரோகித் 203 போட்டிகளில் 24 சதம் அடித்து சச்சினை முந்தியுள்ளார்.
யார்? யார்?
அதாவது, குறைந்த போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, 142 போட்டிகளில் விளையாடி முதலிடம் பிடித்துள்ளார். 161 போட்டிகளில் கோலி, 192 போட்டிகளில் டி வில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.