300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை அடித்துள்ளது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை இந்திய அணி துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் தனது 300வது ரன்னை ரோகித் சர்மா பூர்த்தி செய்துள்ளார்.

205ல் இங்கிலாந்து ஆல்-அவுட்

205ல் இங்கிலாந்து ஆல்-அவுட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துள்ளது. இந்திய பௌலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

தொடரில் ரோகித் 300 ரன்கள்

தொடரில் ரோகித் 300 ரன்கள்

இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடத்துவக்கிய இந்திய அணி சுப்மன் கில் விக்கெட்டை இழந்து 24 ரன்களை எடுத்து முதல் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. இதனிடையே, இந்த போட்டியின்மூலம் இந்த தொடரில் தனது 300 ரன்களை பூர்த்தி செய்துள்ளார் ரோகித் சர்மா.

அதிரடிக்கு ரசிகர்கள் காத்திருப்பு

அதிரடிக்கு ரசிகர்கள் காத்திருப்பு

இரண்டாவது மற்றும் 3வது போட்டிகளில் தனது சதம் மற்றும் அரைசதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இதுவரை அணி வீரர்கள் யாரும் 200 ரன்களையும் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். நாளை அவரது அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும். ஏற்கனவே நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து இந்த போட்டியை வெற்றி கொண்டால் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
No other batsman has scored 200 runs from the Indian team this series so far except Rohit Sharma
Story first published: Thursday, March 4, 2021, 18:05 [IST]
Other articles published on Mar 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X