ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு வராததற்கு இதுதான் காரணம்... மௌனம் கலைத்த பிசிசிஐ

டெல்லி : மற்ற அணி வீரர்களுடன் இணைந்து ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு வராததற்கு காரணம் குறித்து தற்போது பிசிசிஐ மௌனம் கலைத்துள்ளது.

ரோகித்தின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை கவனிக்க யூஏஇயில் இருந்து ரோகித் சர்மா நேரடியாக மும்பை சென்று விட்டதாக பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் காயம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடிப்பதாகவும் தெளிவு இல்லை என்றும் நேற்றைய தினம் விராட் கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூத்த வீரர் அதிரடி நீக்கம்.. காயத்தில் இருந்து குணமானவரை நீக்கி.. அதிர வைத்த பிசிசிஐ!

டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பு

டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பு

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறவில்லை. தொடர்ந்து மாறறியமைக்கப்பட்ட பட்டியலில் அவரது பெயர் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றது. இதையடுத்து யூஏஇயில் இருந்து அவர் நேரடியாக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

என்சிஏவில் பயிற்சி

என்சிஏவில் பயிற்சி

ஆனால் அவ்வாறு இல்லாமல் அவர் இந்தியா திரும்பினார். மேலும் தற்போது என்சிஏவில் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும்வகையில் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வரும் 11ம் தேதி பிட்னஸ் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரோகித் இந்தியா பயணம்

ரோகித் இந்தியா பயணம்

இந்நிலையில் ரோகித் சர்மாவின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் ஆஸ்திரேலியா வராமல் இந்தியா திரும்பியதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவின் காயம் குறித்த குழப்பம் நீடிப்பதாக தெரிவித்திருந்தார்.

என்சிஏவில் பயிற்சி

என்சிஏவில் பயிற்சி

இந்நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்து தற்போது பிசிசிஐ வாய் திறந்துள்ளது. ரோகித் சர்மாவின் தந்தை தற்போது தேறியுள்ளதாகவும் இதை தொடர்ந்தே ரோகித் சர்மா என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஜெய் ஷா மேலும் கூறினார். மேலும் வரும் 11ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ள சோதனையை அடுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rohit come back to Mumbai after the IPL in the UAE to attend to his ailing father -Jay shah
Story first published: Friday, November 27, 2020, 14:37 [IST]
Other articles published on Nov 27, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X