For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அதிக ரிஸ்க் எடுத்திருக்கோம்” 3வது டி20ல் இந்தியா அசால்டாக வென்றது எப்படி.. ரோகித் சர்மா விளக்கம்!

வார்னர் பார்க்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் அசால்டாக வெற்றி பெற்றது எப்படி என கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

ICC T20 Rankings Suryakumar Yadav முன்னேற்றம்! சரிந்த Virat Kohli *Cricket

இரு அணிகளும் மோதிய 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 164/5 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களிலேயே 165/3 ரன்களை சேர்த்து வெற்றி கண்டது.

சூர்யகுமாரின் பக்கா பதிலடி.. 3வது டி20ல் இந்தியா அசத்தல் கம்பேக்.. வெஸ்ட் இண்டீஸை சாய்த்தது எப்படி? சூர்யகுமாரின் பக்கா பதிலடி.. 3வது டி20ல் இந்தியா அசத்தல் கம்பேக்.. வெஸ்ட் இண்டீஸை சாய்த்தது எப்படி?

3வது டி20

3வது டி20

2வது டி20 போட்டியும் இதே வார்னர் பார்க் மைதானத்தில் தான் நடைபெற்றது. அப்போது இந்திய அணி நிர்ணயித்த 138 ரன்களை கூட அடிக்க முடியாமல் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஓவரில் தான் எட்ட முடிந்தது. ஆனால் இந்தியா அணி நேற்று 165 ரன்கள் என்ற இலக்கை வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். வெளியில் இருந்து பார்க்கும் போது நாங்கள் எந்தவித ரிஸ்க்-கும் எடுக்காமல் சுலபமாக வென்றது போன்று தெரியலாம். ஆனால் மிடில் ஓவர்களில் மிக முக்கியமான செயல்பாடுகளை இந்திய பவுலர்கள் மேற்கொண்டிருந்தனர். களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம். வேரியேஷன்களை காட்டினோம்.

 சீரான ரன்வேகம்

சீரான ரன்வேகம்

பேட்டிங்கிலும் சீரான வேகத்தில் ரன்கள் வந்தன. 165 ரன்கள் என்ற இலக்கு இந்த களத்தில் மிகவும் கடினமான ஒன்றாகும். மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிகவும் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுலர்களுக்கு சாதகமாக பிட்ச் இருப்பதால் சரியான ஷாட்களை பயன்படுத்த வேண்டும். அதனை சூர்யகுமார் யாதவ் செய்தார். இப்படி தான் வெற்றி சாத்தியம் ஆனது என ரோகித் சர்மா கூறினார்.

பேட்டிங் & பவுலிங் விவரம்

பேட்டிங் & பவுலிங் விவரம்

இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 33 ரன்களை சேர்த்தார். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Story first published: Wednesday, August 3, 2022, 12:42 [IST]
Other articles published on Aug 3, 2022
English summary
Rohit sharma on India vs west indies 3rd t20 ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20 ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்தியா வென்றது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். v
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X