For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹாங்காங் எதிராக ஆடப்போகும் இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள்?

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இன்று ஹாங்காங் அணியை சந்திக்க உள்ளது.

பெரிய பரபரப்பில்லாமல் இருந்தாலும், ஹாங்காங் அணிக்கு எதிராக இந்தியா நாளைய பாகிஸ்தான் போட்டிக்கான தன் தயார்நிலையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் இடம் பெறப்போகும் வீரர்கள் யார் யார் என ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அவர் அளித்த பேட்டி இதோ..

ரோஹித் சர்மா பதட்டம்

ரோஹித் சர்மா பதட்டம்

ரோஹித் அளித்த பேட்டியில், "இது எனக்கு மிகப் பெரிய பொறுப்பு. நான் இந்திய அணிக்கு முன்பு தலைமை ஏற்று இருக்கிறேன். ஆனால், இது பெரிய தொடர். நான் இவர்களோடு நிறைய ஆடி இருக்கிறேன். எனவே, இவர்களை புரிந்து கொள்ள எளிதாக உள்ளது" என கூறினார்.

அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ்

அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ்

அடுத்து அவர் பேசும் போது, "அம்பத்தி ராயுடு மற்றும் கேதார் ஜாதவ் இருவரும் அணியில் முக்கிய வீரர்கள். இங்கிலாந்து தொடரில் முதலில் ராயுடு இடம் பிடித்தார். ஜாதவ் காயம் காரணமாக தன் இடத்தை இழந்தார். அவர்கள் முக்கிய வீரர்கள். அவர்கள் மீண்டும் அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி" என்றார்.

கலீல் அஹ்மத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா?

கலீல் அஹ்மத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மேலும் ரோஹித், "கலீல் பலவிதமாக பந்து வீசுகிறார். அதே சமயம் வேகமாகவும் வீசுகிறார். அவர் இளம் மற்றும் திறமையான வீரர். அவரால் பேட்ஸ்மேன்களை தொல்லைப்படுத்த முடியும் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர் இதுவரை எந்த போட்டியிலும் ஆடவில்லை. ஆனால், உச்சகட்டமாக போட்டிகளில் பங்கேற்க அத்தனை வித்தைகளும் கைவசம் வைத்துள்ளார்" என கூறினார்.

அணியில் யார் யார்?

அணியில் யார் யார்?

இன்றைய ஹாங்காங் போட்டியில், இந்திய அணியில் யார் யார் ஆடுவார்கள் என்பது ரோஹித் கொடுத்த பேட்டியை வைத்தே ஓரளவு நாம் கணிக்க முடிகிறது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தவான், ரோஹித் மற்றும் ராகுல் தான் இருப்பார்கள். அதே போல பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர், குல்தீப், சாஹல் நான்கு பேர் கூட்டணியில் பெரிய மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. ஒருவேளை, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா அல்லது புவிக்கு ஓய்வு அளிக்க வேண்டி வாய்ப்பு மறுக்கப்பட்டால் தான் உண்டு. அப்படி அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டால், ஷர்துல் அல்லது கலீல் இருவரில் யார் இடம் பிடிப்பார்கள் என எண்ணிய வேளையில், ரோஹித் பேட்டி மூலம் கலீல் இடம் பிடிப்பார் என ஓரளவு கணிக்க முடிகிறது. மிடில் ஆர்டரில் தோனி, பண்டியா உறுதி. மற்ற இடத்திற்கு கேதார் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு தான் இடம் பிடிப்பார்கள் என்பதையும் கணிக்க முடிகிறது. மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கடினம் என தெரிகிறது.

Story first published: Tuesday, September 18, 2018, 11:48 [IST]
Other articles published on Sep 18, 2018
English summary
Rohit sharma hints on playing eleven for Hongkong match. Rayudu, Kedhar Jadav may get chance today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X