For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய துணைக்கேப்டன்.. பிசிசிஐ கூட்டத்தில் அதிரடி முடிவு.. அதிர்ஷ்ட வீரர் யார்?

மும்பை: இந்திய அணியில் இனி ரகானே இடம்பெறுவது கடினம் என்பதை பிசிசிஐ மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

Recommended Video

BCCI- Indian Players இடையே வாக்குவாதம்? SA Tour பிரச்னை! | OneIndia Tamil

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் தான் இந்திய அணி ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறி வந்த கருத்துக்கள் நிஜமாகியுள்ளன. அதற்கு காரணம் அஜிங்கியா ரகானே.

நியூசிலாந்து டெஸ்ட்

நியூசிலாந்து டெஸ்ட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எப்படியாவது பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இருந்தார் ரகானே. ஆனால் அவரால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறி 2வது டெஸ்ட் போட்டியில் வெளியேற்றப்பட்டார். மேலும் அவரின் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். இந்த அறிகுறிகளால் ரகானேவின் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது என வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர்.

பதவி பறிப்பு

பதவி பறிப்பு

இந்நிலையில் அதனை பிசிசிஐ மறைமுகமாக உறுதி செய்துள்ளது. ரகானே தனது கடைசி 20 இன்னிங்ஸில் வெறும் 407 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் வெறும் 2 அரைசதங்களே அடங்கும். இவ்வளவு மோசமான ஆட்டங்களில் அவரை அணியில் வைத்திருந்ததற்கு காரணம் துணைக்கேப்டன் என்ற பதவி தான். தற்போது அந்த பதவியை வேறு ஒருவருக்கு வழங்க பிசிசிஐ ஆலோசனைக்குழு முடிவெடுத்துள்ளது.

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ கூட்டம்

இதுகுறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிப்பதா அல்லது கே.எல்.ராகுலை நியமிப்பதா என்ற விவாதம் நடந்துள்ளது. இறுதியில் அனுபவத்தையும், கேப்டன்சியையும் கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

கேப்டன் பொறுப்புகள்

கேப்டன் பொறுப்புகள்

ரோகித் சர்மா ஏற்கனவே இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் கோலியின் கேப்டன்சி பதவி ரோகித்திடம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான் தற்போது டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 4, 2021, 10:20 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Rohit Sharma is likely to be named as vice-captain of the Indian Test team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X