For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு.. உணர்ச்சி பொங்க ரோகித் சர்மா கடிதம்.. ரசிகர்களுக்கு நன்றி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி இதே நாளில் இந்திய அணி, அயர்லாந்துடன் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.

அப்போது, முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த ரோகித் சர்மாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன?? இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன??

தவிர்க்க முடியாத வீரர்

தவிர்க்க முடியாத வீரர்

இதனையடுத்து 2007 டி20 உலக கோப்பை தொடர், 2008 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரராக விளங்கிய ரோகித் சர்மா, உள்ளே வெளியே என இருந்தார். அதன் பிறகு 2013ஆம் ஆண்டு தொடக்க வீரராக புரோமோசன் பெற்ற ரோகித் சர்மா, அன்று முதல் இன்று வரை சிங்க நடை போட்டு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருகிறார்.

கேப்டன் பயணம்

கேப்டன் பயணம்

ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதம் என பல்வேறு சாதனைகளை படைத்த ரோகித் சர்மா, தற்போது இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் 15வது ஆண்டை நிறைவு செய்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ரோகித் கடிதம்

ரோகித் கடிதம்

அதில் இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நிகழ்வையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.இந்த நீண்ட பயணத்தில் எனக்கு ஒருதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றிகள். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நான் சொல்லி கொள்வது எல்லாம், உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் எங்களுக்கு சவால்களை சமாளிக்க கருவியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய சவால்

புதிய சவால்

தற்போது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் உள்ள ரோகித் சர்மாவுக்கு நடப்பாண்டில் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. நடப்பாண்டில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அதை மட்டும் ரோகித் செய்தால், தோனிக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் பெறுவார்.

Story first published: Thursday, June 23, 2022, 13:40 [IST]
Other articles published on Jun 23, 2022
English summary
Rohit sharma letter to fans for his 15th year anniversary in international cricket சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு.. உணர்ச்சி பொங்க ரோகித் சர்மா கடிதம்.. ரசிகர்களுக்கு நன்றி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X