For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்

மும்பை: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணியில் அதிகப்படியான மாற்றங்களை கொண்டு வர கேப்டன் ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து கடைசி போட்டி நாளை இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தால் இந்தியா நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் அணி என்ற பெருமையை பெறும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

முக்கியமான போட்டியாக இருந்தாலும் பலகட்ட மாற்றங்களை செய்ய ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். கடந்த போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய அவர், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீண்ட நாட்களாக பந்துவீசி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் வருகிறது. எனவே அவர்களின் பணிச்சுமையை யோசிக்க வேண்டியுள்ளது எனக் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல தான் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

சுப்மன் கில் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார், ஆனால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இஷான் கிஷானை ஓப்பனிங்கில் களமிறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் கே.எஸ். பரத்தை கொண்டு வரலாம். ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகியுள்ள கே.எல்.பரத் அதற்கு தயாராகும் வகையிலாவது 3வது போட்டியில் விளையாடியாக வேண்டும். இல்லையெனில் கில்லுக்கு மாற்றாக ராஜட் பட்டிதாரும் வாய்ப்பு பெற காத்துள்ளார்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர் சபாஷ் அகமதுக்காக வாஷிங்டன் சுந்தர் வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல மற்றொரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம். அட்டகாசமான ஃபார்மில் உள்ள சாஹலுக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கப்படவில்லை.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது சிராஜ், ஷமி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நீக்கப்படுவதை ரோகித்தே மறைமுகமாக கூறிவிட்டார். எனவே அவரின் இடத்திற்கு உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம். ஷர்துல் தாக்கூர் வழக்கம் போல தனது செயல்பாட்டை செய்வார்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ராஜட் பட்டிதார், ஹர்திக் பாண்ட்யா, சபாஷ் அகமது, யுவேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்

Story first published: Monday, January 23, 2023, 14:26 [IST]
Other articles published on Jan 23, 2023
English summary
Captain Rohit sharma makes a multiple changes in India playing 11 for 3rd ODI match against new zealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X