வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா!

சென்னை: இந்திய அணியில் திடீரென சேர்க்கப்பட்டு இருக்கும் பிட்னஸ் டெஸ்ட் காரணமாக ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் கஷ்டப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை வைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் முறை மூலமாகவே தற்போது வரை இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் இதே டெஸ்ட் முறையை கொஞ்சம் மாற்றி பயன்படுத்தி வருகிறது. இந்திய வீரர்கள் பிட்டாக இருக்க இந்த டெஸ்டிங் முறை முக்கிய காரணம் ஆகும்.

கடினம்

கடினம்

யோ யோ டெஸ்ட் என்பது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போதும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கடைசி சுற்று வரை வேகத்தை அதிகரித்து அதிகரித்து நிற்காமல் ஓட வேண்டும்.

எப்படி?

எப்படி?

இதில் வெற்றி பெற்று பிட்னஸை நிரூபிப்பது மிகவும் கடினம். இதில் வெற்றிபெற குறைந்தது 17.1 புள்ளிகள் பெற வேண்டும். இந்த நிலையில் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்ய கூடுதலாக இன்னொரு டெஸ்ட் முறை சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி 2 கிலோ மீட்டர் தூரத்தை வீரர்கள் எவ்வளவு வேகமாக கடக்கிறார்கள் என்று சோதனை செய்யப்படும்.

 சோதனை

சோதனை

இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 2 கிமீ தூரத்தை 8.15 நிமிடத்தில் கடக்க வேண்டும். இன்னொரு பக்கம் பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள், ஸ்பின் பவுலர்கள் 8.30 நிமிடத்தில் இந்த தூரத்தை கடக்க வேண்டும். இதுதான் புதிய டெஸ்ட் முறையாகும்.

சிக்கல்

சிக்கல்

யோ யோ டெஸ்டில் குறைந்த மதிப்பெண் வைத்து இருக்கும் ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் போன்றவர்கள் இந்த டெஸ்டில் தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளது. அதிக எடையால் இவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் இந்த டெஸ்டில் பாஸ் ஆக வாய்ப்புள்ளது கஷ்டம் என்கிறார்கள்.

டார்கெட்

டார்கெட்

அதிலும் ரோஹித் சர்மா போன்ற பிட்னஸை பின்பற்றாத வீரர்களை குறி வைத்த இந்த டெஸ்ட் முறை உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். வீரர்கள் பிட்டாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உறுதி செய்ய இந்த டெஸ்ட் முறை இணைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rohit Sharma may struggle to pass the new fitness test created by BCCI for selection.
Story first published: Wednesday, January 27, 2021, 16:44 [IST]
Other articles published on Jan 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X