"ஹிட்மேனை" சொடக்கு போடும் நேரத்தில்.. தட்டித் தூக்கலாம்.. "அந்த" ஒன்னு நடந்துச்சுன்னா - ஸ்டைரிஸ்

சவுத்தாம்ப்டன்: ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று கலக்கமான அப்டேட் தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவரை எப்படி சோதிக்கப் போகிறது தெரியுமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா?" - முன்னாள் தலைவர் "பொளேர்" பதில்

பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இவ்விரண்டு தனித்தனி தொடரிலும், ஓப்பனராக களமிறங்க உள்ளார் ரோஹித் ஷர்மா.

டீசன்ட் பிளே

டீசன்ட் பிளே

ஒருநாள், டி20 போட்டிகளில் விளாசித் தள்ளும் ரோஹித், இதுவரை தன்னை டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக நிரூபித்ததில்லை. இந்திய கண்டிஷன்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் திணறும் ரோஹித், வெளிநாடு கண்டிஷன்களிலும் பெரிதாக ஒன்றும் செய்ததில்லை. எனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ஓரளவுக்கு டீசன்ஸி காட்டினார் ரோஹித். அவரது ஆட்டத்தில் ஐடியா இருந்தது. தெளிவான புரிதலும், திட்டமிடலும் இருந்தது.

இலங்கையில் அடிச்சது

இலங்கையில் அடிச்சது

அவரது வெளிநாடு டெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் பார்த்தோம் என்றால், இந்தியாவுக்கு வெளியே இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 945 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித். பெஸ்ட் ஸ்கோர் 79. ஆவரேஜ் 27.00. குறிப்பாக, இங்கிலாந்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 34 ரன்கள். இவரது சிறந்த ஸ்கோரான 79 இலங்கையில் அடித்தது தான்.

புதிய பந்து

புதிய பந்து

இந்த நிலையில், இங்கிலாந்தின் ஸ்விங் கண்டிஷனில், ரோஹித் தடுமாறுவார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சில் எந்த ரகசியமும் இல்லை. அணியில், சவுதி, போல்ட் மற்றும் மூன்றாவது ஃபாஸ்ட் பவுலராக ஜேமீசன் அல்லது டி கிராண்ட்ஹோம் இருப்பார்கள். அதேசமயம், நீல் வாக்னர் களத்திற்கு வர வாய்ப்புள்ளது. நீல் வாக்னரின் ஆக்ரோஷம், புதிய பந்து எடுக்கப்படும் வரை, மிடில் ஓவர்களில் விராட் கோலியைப் போன்ற ஒருவரின் விக்கெட்டை எடுப்பது அவருடைய திறமையாகும். "

கால்களை நகர்த்தமாட்டார்

கால்களை நகர்த்தமாட்டார்

ரோஹித்தை பொறுத்தவரை, பிட்ச் தான் அவரது ஆட்டத்தை முடிவு செய்யும். அதற்கு மேல் இதில் பேச ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். பந்து அதிகம் ஸ்விங் ஆகிறது என்றால், ரோஹித் பெரும் போராட்டத்தை சந்திப்பார் என்றே நினைக்கிறன். ஏனெனில், ரோஹித் தனது இன்னிங்ஸில் ஆரம்பத்தில் தனது கால்களை பெரிதாக நகர்த்தமாட்டார் என்று தெரியும். எனவே, ஸ்விங் இருந்தால் நிச்சயம் இறுதிப் போட்டி அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கலாம்" என்று ஸ்டைரிஸ் மேலும் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit Sharma might be troubled in wtc final - ரோஹித் ஷர்மா
Story first published: Monday, June 14, 2021, 17:21 [IST]
Other articles published on Jun 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X