For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - பிளேயிங் லெவனில் 2 மாற்றம்.. அறிமுக வீரருக்கு வாய்ப்பு ?

ராய்ப்பூர் : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை சனிக்கிழமை தொடங்குகிறது. இதன் மூலம் ராய்ப்பூர் ஷாகித் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது.

இங்கு இதுவரை 6 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று உள்ளது. ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் பந்து பேட்டிற்கு சரி வர வராது. எனினும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வாய்ப்பு கிடைக்கும்.

இதனிடையே, இந்திய அணியில் நாளைய போட்டியில் மாற்றங்களை ஏற்படுத்த ரோகித் சர்மா முயற்சித்து வருகிறார். 350 ரன்கள் அடித்தும் இந்தியா தோல்வியை நோக்கி சென்றதால் பந்துவீச்சில் மாற்றம் நிகழலாம்.

உலக கோப்பை ஹாக்கி- நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி.. வெல்ஸ் அணியிடம் அபாரம்உலக கோப்பை ஹாக்கி- நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி.. வெல்ஸ் அணியிடம் அபாரம்

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவும். சுப்மான் கில்லும் தொடர்வார்கள். சுப்மான் கில்லுக்கு இரட்டை சதம் அடித்ததில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே இஷான் கிஷன் தொடக்க வீரராகவும், ரஜட் பட்டிதார் நடுவரிசையிலம் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

நெருக்கடியில் 2 பேர்

நெருக்கடியில் 2 பேர்

விராட் கோலி நம்பர் 3வது இடத்திலும், இஷான் கிஷன் நம்பர் 4வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 5வது இடத்திலும் விளையாடுவார்கள். இதில் இஷான் கிஷனும், சூர்யகுமாரும் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இதே போன்று நம்பர் 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், 7வது இடத்தில் வாசிங்டன் சுந்தரும் தங்களது இடத்தை உறுதி செய்து கொண்டார்கள்.

பந்துவீச்சில் மாற்றம்

பந்துவீச்சில் மாற்றம்

தற்போது பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கடைசி ஓவரில் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்தார். ஷர்துல் தாக்கூருக்கு பதில் உம்ரான் மாலிக் திரும்ப வாய்ப்புள்ளது.மற்ற 2 வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் திரும்ப, குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சாளராக தொடர்வார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மான் கில், 3, விராட் கோலி, 4, இஷான் கிஷன், 5, சூர்யகுமார் யாதவ், 6, ஹர்திக் பாண்டியா, 7, வாசிங்டன் சுந்தர், 8, குல்தீப் யாதவ், 9, முகமது சிராஜ், 10,முகமது ஷமி, 11, ஷர்துல் தாக்கூர் / உம்ரான் மாலிக்

Story first published: Friday, January 20, 2023, 9:26 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Rohit sharma might change bowling option vs NZ 2nd odi நியூசிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - பிளேயிங் லெவனில் 2 மாற்றம்.. அறிமுக வீரருக்கு வாய்ப்பு ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X