For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டனாக என் முதல் பணி.. !! இது ரோகித் ஸ்டைல் கேப்டன்சி.!!. மனம் திறக்கும் ரோகித் சர்மா..!!

மும்பை: இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா முதல் முறையாக பொறுப்பேற்று மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடுகிறார்.

ஐ.சி.சி. தொடர்களை வெல்வதே ரோகித் சர்மாவின் முதல் சவாலாக இருக்கும். இதனை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார்

ரோகித் சர்மாவின் கேப்டன்சி ஸ்டைல் எப்படி இருக்கும். அவர் திட்டங்கள் என்ன என்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியை தற்போது காண்போம்.

இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு-பொலார்ட் தலைமையில் அதிரடி வீரர்கள் தேர்வு..இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு-பொலார்ட் தலைமையில் அதிரடி வீரர்கள் தேர்வு..

முதல் பணி

முதல் பணி

நாம் எத்தனை சதங்கள் அடித்தாலும், உலகக் கோப்பையை வென்றால் அந்த தருணம் நமது மனதில் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு, தனி நபர் விளையாட்டு அல்ல. அணியாக ஒருங்கிணைந்து சிறந்து விளையாடினால் தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் குறிகோள்.

எல்லாம் கிடைத்துவிட்டது

எல்லாம் கிடைத்துவிட்டது

தற்போது 3 உலகக் கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. அதனை வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக பல விசயங்களை நாங்கள் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியாளர்கள், ஆதரவு எல்லாம் எங்களுக்கு தற்போது கிடைத்துவிட்டது. இன்னும் 3 மாதத்தில் உலக கோப்பைக்கான அணி தயாராகிவிடும் .

உறுதி செய்வேன்

உறுதி செய்வேன்

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பல அழுத்தங்கள் வீரர்களுக்கு ஏற்படும். கேப்டனாக என்னுடைய முதல் பொறுப்பு அந்த அழுத்தங்களை அவர்களுக்காக நான் தாங்கி கொள்வேன். வீரர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்குவேன். அணியில் அவர்களுடைய இடத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்வேன்.

பின்னால் நிற்பேன்

பின்னால் நிற்பேன்

சின்ன சின்ன விசயங்களை சரியாக செய்தால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். கேப்டனாக சிறப்பாக செயல்படுவதில் முதன்மையாக நிற்பேன். மற்ற படி அணிக்கு பின்னால் நிற்பேன், ஒழிந்து கொள்ள அல்ல, அவர்கள் பின்னால் நின்று தோள் மீது கைப்போட்டு ஆதரவு அளிப்பேன். கேப்டன் பின்னால் நின்றால் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது நன்கு தெரியும். களத்திற்கு ஏற்ப சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வது, யுத்திகளை உருவாக்குவது இது தான் கேப்டனுடைய பொறுப்பு.

Recommended Video

Sachin Tendulkar Weighs In On India's World Cup Chances Under Rohit - Dravid | Oneindia Tamil
டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

டி20 உலக கோப்பை விளையாடுவதற்கு முன் 21 டி20 போட்டிகளில் விளையாட போகிறோம். அதற்குள் அணியை தயார் செய்து விடுவோம். அணியாக ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால் நிச்சயம் வெற்றி உறுதி. கேப்டனாக என் கண்கள் தற்போது ஐ.சி.சி. தொடர் மீது தான் உள்ளது. ( ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது)

Story first published: Thursday, January 27, 2022, 19:04 [IST]
Other articles published on Jan 27, 2022
English summary
Rohit sharma opens up about his captaining style and Winning ICC Championshipகேப்டனாக என் முதல் பணி.. !! இது ரோகித் ஸ்டைல் கேப்டன்சி.!!. மனம் திறக்கும் ரோகித் சர்மா..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X