For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் (அ) கோலி.. டி20யில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? தெளிவான பதில் சொன்ன ஹர்பஜன் சிங்!

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து சாதனை செய்தார் ரோஹித் சர்மா.

இந்த நிலையில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் பேட்டிங்கில் கோலோச்சி வரும் இந்திய அணியின் கோலி, ரோஹித் இடையே யார் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

சாதனைகள் பேசும்

சாதனைகள் பேசும்

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த ஹர்பஜன் சிங் இது குறித்த தன் பார்வையை கூறினார். ஹர்பஜன், இருவரும் மிகப் பெரும் வீரர்கள். போட்டிகளை வென்று கொடுத்தவர்கள். அவர்களது சாதனைகளே அவர்களை பற்றி பேசும் என்றார்.

ரோஹித் திறமை - கோலி உழைப்பு

ரோஹித் திறமை - கோலி உழைப்பு

ரோஹித் சர்மா அதிக திறமை வாய்ந்தவர். விராட் கோலி கடுமையாக உழைக்கும் கிரிக்கெட் வீரர். கோலி, ரோஹித் போன்ற திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது கடும் உழைப்பு மற்றும் கிரிக்கெட் ஆர்வம் தான் அவரை இன்று அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என தெரிவித்தார் ஹர்பஜன்.

இது தான் முக்கியம்

இது தான் முக்கியம்

இவர்கள் இருவரில் யார் சிறந்தவர் என என்னால் எளிதில் கூற முடியாது. ஆனால், இவர்கள் இருவரும் இந்தியாவிற்காக ஆடுகிறார்கள் என்பது தான் முக்கியம் என கூறினார் ஹர்பஜன்.

ரோஹித் 4 சதங்கள்

ரோஹித் 4 சதங்கள்

கோலி டி20 போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காத நிலையில், ரோஹித் நான்கு சதங்கள் அடித்துள்ளார். இது குறித்து பேசிய ஹர்பஜன், ரோஹித் துவக்க வீரர் என்பதால் அவரால் விரைவில் ரன் குவிப்பில் ஈடுபட முடிகிறது.

கோலி சதம் அடிக்காதது ஏன்?

கோலி சதம் அடிக்காதது ஏன்?

ஆனால், கோலி பல சமயம் துவக்க வீரர்களின் விக்கெட்கள் விழுந்த பின் பேட்டிங் செய்ய வருகிறார். அதனால், நிதானமாக ஆடத் துவங்கி ரன் குவிப்பில் ஈடுபட துவங்கும் போது 15-16 ஓவர்கள் ஆகி விடுகிறது. அதனால், இந்த புள்ளி விவரம் எல்லாம் முக்கியமில்லை என்றார் ஹர்பஜன்.

Story first published: Saturday, February 9, 2019, 19:29 [IST]
Other articles published on Feb 9, 2019
English summary
Rohit Sharma or Kohli - who is better T20 Batsman? Harbhajan explain his view.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X