For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பணம் தான் ஃபர்ஸ்ட்.. மற்றது எல்லாம் நெக்ஸ்ட்.. ரோகித் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி

மும்பை: ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு 0.002 சதவீதம் மட்டுமே உள்ளது.

எஞ்சிய 5 போட்டிகளை வென்றாலும், மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்,

இந்த நிலையில், மும்பை அணியில் பல மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறிகள் தென் படவில்லை.

தொடர்ந்து விளையாட்டு

தொடர்ந்து விளையாட்டு

தற்போது இந்திய அணியின் அனைத்து விதமான போட்டிக்கும் கேப்டன் ரோகித் சர்மா தான். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்தாலும், சமீப காலமாக அவரது பேட்டிங் பாதிக்கப்பட்டது. அவர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பதற்கு ஒரு நொடி தான் தேவைப்படும். ஆனால் அவர் உடலும், மூலையும் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறது.

ஓய்வு இல்லை

ஓய்வு இல்லை

ரோகித் சர்மா கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்திய அணியின் அனைத்து போட்டியிலும் கேப்டனாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ்க்கு கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார். ஐபிஎல் முடிந்ததும் அடுத்த 10 நாட்களில் தென்னாப்பிரிக்கா தொடர் வர இருக்கிறது. இப்படி ஓய்வே இன்றி விளையாடினால் என்ன ஆகும்.

ரோகித் பிடிவாதம்

ரோகித் பிடிவாதம்

சரி, ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. தற்போது பிளே ஆப் சுற்று வாய்ப்பு இல்லை என தெரிந்தும், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ரோகித் சர்மா, பும்ரா போன்ற வீரர்கள் விளையாடி வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

பிசிசிஐ தரக்கூடாது

பிசிசிஐ தரக்கூடாது

ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுக்காமல், தென்னாப்பிரிக்க தொடருக்கு ரோகித், பும்ரா ஆகியோர் ஓய்வு கேட்டால், பிசிசிஐ அதற்கு அனுமதி தரக் கூடாது என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய அணி தான் முக்கியம் என்று வீரர்கள் நினைத்து இருந்தால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி இருப்பார்கள். இந்த வகையில் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணி தான் முக்கியம் என ஐபிஎல் தொடரை துறந்தார். அனைத்தையும் ரசிகர்கள் கவனித்து கொண்டு தான் உள்ளனர்.

Story first published: Friday, May 6, 2022, 21:05 [IST]
Other articles published on May 6, 2022
English summary
Rohit sharma rejected request to take break from IPL 2022 ரோகித் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X