சுலபமாக இருக்காது.. திருப்புமுனையே அங்கு தான்.. வெற்றி குறித்து ரோதித் சர்மா பேச்சு.. IND vs SA

திருவனந்தபுரம் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

IND vs SA 1st T20: Arshdeep,Chahar Duo முதல் SKY Consistency வரை | Aanee's Appeal | *Cricket

ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதால் பேட்ஸ்மேன்கள் ரண்குவிக்க சிரமப்பட்டனர்.

குறிப்பாக இந்திய அணி வீரர் ஆர்ஸ்தீப் சிங், தீபக்சாகர் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசியதில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது.

தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சுதென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு

கடினமாக இருந்தது

கடினமாக இருந்தது

இந்திய அணி பேட்டிங் செய்யும்போதும் சிரமப்பட்டது. எனினும் கே எல் ராகுல் சூரியக்குமாறு யாதவ் ஆகியோர் அரை சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது.இது போன்ற ஆட்டத்தில் விளையாடும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

கடினமான சூழ்நிலையில் ஒரு அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம். அதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று முதலில் எதிர்பார்த்தோம். ஆனால் ஆட்டம் முழுவதும் பந்துவீச்சாளர்கள் கையே ஓங்கி இருக்கும் என்று நினைக்கவில்லை.

திருப்புமுனை

திருப்புமுனை

சொல்லப்போனால் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி வெற்றி பெற்றது. நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, சிறிது நேரத்தில் முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆட்டத்தின் திருப்புமுனை அதுதான். பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது இன்றைய போட்டி சிறந்து எடுத்துக்காட்டு.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

107 ரன்களை துரத்துவது எளிதாக இருக்காது என்று எங்களுக்கு தெரியும். ஆடுகளம் சிறப்பாக இல்லை. அதற்கு மதிப்பு கொடுத்து விளையாட வேண்டும். முதலில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். பிறகு கே எல் ராகுல் சூர்யா, குமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுத்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma reveals about the turning point of the matchசுலபமாக இருக்காது.. திருப்புமுனையே அங்கு தான்.. வெற்றி குறித்து ரோதித் சர்மா பேச்சு.. IND vs SA
Story first published: Wednesday, September 28, 2022, 23:32 [IST]
Other articles published on Sep 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X