For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது முறை ரோகித்துக்கு கொரோனா உறுதி.. புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.. 35 ஆண்டுக்கு பிறகு சாதனை

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

ENG vs IND Rohit Sharma விலகல் ! Captain-னாக Jasprit Bumrah அறிவிப்பு *Cricket

கடந்த சனிக்கழமை ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் 3 நாள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து பயிற்சி ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கேஎஸ் பரத் தொடக்க வீரராக களமிறங்கினார்.

தேர்வுக்குழுவின் மெகா தவறு.. ரோகித் சர்மா விசயத்தில் கோட்டைவிட்டார்கள்.. சேவாக் காட்டமான விமர்சனம்தேர்வுக்குழுவின் மெகா தவறு.. ரோகித் சர்மா விசயத்தில் கோட்டைவிட்டார்கள்.. சேவாக் காட்டமான விமர்சனம்

பின்னடைவு

பின்னடைவு

இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு 3 நாளுக்கு பிறகு மீண்டும் ஆர் டி பிசிஆர் பரிசோதனை நடைபெற்றது. இதில் மீண்டும் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து ரோகித் சர்மா 5வது டெஸ்டிலிருந்து விலகுவதாக பி.டி.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்திய அணியின் பெரும் பின்னடைவுக்கு கருதப்படுகிறது.

35 ஆண்டுகள்

35 ஆண்டுகள்

ரோகித் சர்மா விலகிய நிலையில், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டில் மட்டும் இந்திய அணிக்கு பும்ரா 6வது கேப்டனாக செயல்படுகிறார்.

நடுவரிசையில் மாற்றம்

நடுவரிசையில் மாற்றம்

ரோகித் சர்மா வெளியேறிய நிலையில், தொடக்க வீரராக புஜாரா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புஜாராவுக்கு பதில் ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா கேப்டனாக எப்படி செயல்படுவார், நுணக்கங்களை எப்படி கையாள்வார் என்பது குறித்து காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, சுப்மான் கில், 2. புஜாரா, 3, விஹாரி, 4, விராட் கோலி, 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7,ஜடேஜா. 8, ஷர்துல் தாக்கூர், 9,முகமது ஷமி, 10, பும்ரா, 11,முகமது சிராஜ்

Story first published: Wednesday, June 29, 2022, 20:10 [IST]
Other articles published on Jun 29, 2022
English summary
Rohit sharma ruled out of Ind test – Jasprit bumrah named captain2வது முறை ரோகித்துக்கு கொரோனா உறுதி.. புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.. 35 ஆண்டுக்கு பிறகு சாதனை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X