For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித்தோட திறமையே அவருக்கு எதிர்மறையாயிடுது.. டேவிட் கோவர் கருத்து

டெல்லி : இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவின் திறமையே சில சமயங்களில் அவருக்கு எதிர்மறையாக மாறிவிடுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் நீண்ட நேரங்கள் நிதானமாக நின்று விளையாடுவதே ரோகித் சர்மாவின் தனித்திறமை என்று அவர் சிலாகித்துள்ளார்.

ஆனால் சில சமயங்களில் அதிலிருந்து அவர் தவறும்போது, எதிர்மறை கருத்துக்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் கோவர் சுட்டிக் காட்டினார்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னையே நான் உணர்றேன்... ரோகித் சர்மா சிலிர்ப்பு ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னையே நான் உணர்றேன்... ரோகித் சர்மா சிலிர்ப்பு

பொறுமையான ஆட்டம்

பொறுமையான ஆட்டம்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மைதானத்தில் நிதானமாக நின்று விளையாடுவார். இதனால் அவரை எளிதில் வீழ்த்துவது எதிரணியினருக்கு சவாலாக அமைந்து விடுகிறது. இந்த திறமையே அவர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க காரணமாகவும் அமைந்துள்ளது. அவர் பொறுமையுடன் விளையாடுவதாக அவர் மீது குற்றச்சாட்டையும் இந்த அவரது குணமே அவருக்கு பெற்றுத் தருகிறது.

வெற்றிக்கு ரகசியம்

வெற்றிக்கு ரகசியம்

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் கிரீசில் நின்று நிதானமாக விளையாடுவதே ரோகித் சர்மாவின் வெற்றிக்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். பலவித திறமைகளை ரோகித் சர்மா பெற்றிருந்தாலும், இந்த நிதானமான எளிதில் அவுட் ஆகாத அவரது திறமையே முக்கியமான அவரது திறமையாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

திறமை வெளிப்படாது

திறமை வெளிப்படாது

இவ்வாறு இல்லாமல் உடனடியாக அவுட் ஆனால், அங்கு எந்தவிதமான திறமையும் செயல்படாது என்றும் கோவர் தெரிவித்துள்ளார். இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனேவும் இத்தகைய திறமை மிக்கவர் என்று தெரிவித்துள்ள கோவர், நீண்ட நேரம் நின்று ஆடினால் மட்டுமே உங்களால் ரன்களை குவிக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். இதன்மூலம் மட்டுமே ரசிகர்கள் உங்களை கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.

எதிர்மறை கமெண்டுகள்

எதிர்மறை கமெண்டுகள்

இவ்வாறு அவுட் ஆகாமல் நீண்ட நேரம் நின்று விளையாட, அந்த ஆட்டத்தின்பால் தீவிரம், திறன், தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, நிதானம், கவனம் போன்றவை இருக்க வேண்டும் என்றும் கோவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திறமையே எதிர்மறையான கமெண்ட்டுகளையும் பெற்றுத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முயற்சிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது

முயற்சிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது

நீண்ட நேரம் நின்று விளையாடாமல் போனால், அக்கறை மற்றும் கவனம் இல்லாமல் விளையாடியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழும் சூழல் உருவாகும் என்றும் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். பவுண்டரிக்கு முயற்சி செய்து அவுட் ஆகும் நேரங்களில், நாம் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தமில்லை. மாறாக அந்த முயற்சி பலிக்கவில்லை என்றே அர்த்தம் என்றும் கோவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 12, 2020, 17:22 [IST]
Other articles published on Jul 12, 2020
English summary
No-one gets to see that grace if you get out -Gower
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X