For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். அணிக்கு பயிற்சியாளரானால்..? சபாஷ்…!! சாமர்த்தியமாக பதில் சொன்ன சாதனை வீரர்..!!

மான்செஸ்டர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நீங்கள் பரிந்துரைப்பது என்ன? என்று கேள்விக்கு ரோகித் சர்மா, நகைச்சுவையாக பதில் அளித்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்த ரோகித், ஆட்ட நாயகன் விருது பெற்றார். அப்போது அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்தோம், இந்த போட்டியில் அதுவும் நிறைவேறியது. எனது ஆட்டம் மிகவும் திருப்தி. இரட்டைச்சதம் அடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை.

அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இந்தியாவை வீழ்த்தி இருக்குமா பாக்.? #INDvsPAK அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இந்தியாவை வீழ்த்தி இருக்குமா பாக்.? #INDvsPAK

எனது திட்டம்

எனது திட்டம்

அது போன்று தான் இந்த போட்டியிலும் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை. முடிந்த வரை ஆட்டமிழக்காமல் விளையாடுவது தான் எனது திட்டம். ஸ்கோரை உயர்த்த நல்ல வாய்ப்பு வந்த போது அவுட்டாகி விட்டேன். அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம். ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல் பட்டனர்.

பாகிஸ்தான் பயிற்சியாளர்

பாகிஸ்தான் பயிற்சியாளர்

அப்போது நிருபர் ஒருவர், நீண்டகாலமாக பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. எனவே சக வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நீங்கள் பரிந்துரைப்பது என்ன? என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, இதை நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் தெரிவித்திருப்பேன். இப்போது எதைக் கூற முடியும் என்றார்.

2வது இந்திய வீரர்

2வது இந்திய வீரர்

140 ரன்கள் எடுத்ததன் மூலம், உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றார். ஏற்கனவே 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் கோலி 107 ரன் சதம் அடித்திருந்தார்.

துபாயில் சதம்

துபாயில் சதம்

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம் கண்ட முதல் இந்திய வீரர் ரோகித். கடந்த ஆண்டு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 111 ரன்கள் குவித்தார்.

Story first published: Monday, June 17, 2019, 18:26 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
Rohit sharma’s response to pak, if he advice to Pakistan batsman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X