For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தெரிந்துக்கொள்ளுங்கள்" கேப்டன்சி மாற்றத்தின் பின் ரோகித் சம்பளம் எவ்வளவு? கோலிக்கு ஊதியம் குறைப்பா

மும்பை: கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்பட்ட பின்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் சம்பளம் எவ்வளவு மாறியுள்ளது என ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

Recommended Video

Captaincy மாற்றத்தின் பின் Rohit-ன் சம்பளம் என்ன? | Oneindia Tamil

இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

விராட் கோலிக்கு விருப்பம் இல்லை என தெரிவித்த போதும், பிசிசிஐ பிடிவாதமாக இந்த முடிவை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 காரணம் என்ன

காரணம் என்ன

கோலியின் விவகாரம் குறித்து பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனி தனி கேப்டன் இருந்தால் பிரச்னை ஏற்படும். அதற்காக தான் டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கேட்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதன் விளைவு தான் தற்போது நடந்துள்ளது என கூறினார்.

 ஊதிய மாற்றம்?

ஊதிய மாற்றம்?

இந்நிலையில் கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மதிப்பு என்ன? அவர்களின் சம்பளம் மாற்றம் எவ்வளவு என அதிகளவில் ரசிகர்கள் தேடி வருகின்றனர். மேலும் விராட் கோலியின் ஊதியம் குறைக்கப்பட்டு, ரோகித் சர்மாவுக்கு அதிகப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

நிஜ சம்பளம் எவ்வளவு

நிஜ சம்பளம் எவ்வளவு

ஆனால் அப்படி ஏதுமே நடைபெறவில்லை. பிசிசிஐ-யை பொறுத்தவரை ஆண்டு தோறும் வருடாந்திர ஊதிய ஒப்பந்தம் போடப்படும். அதில் ஏ பிரிவு, ஏ+ பிரிவு என பல வகைகளாக வீரர்கள் பிரிக்கப்படுவார்கள். அந்தவகையில் தற்போது பிசிசிஐ-ன் முதன்மை பிரிவான ஏ+ல் தான் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

பிசிசிஐ-ன் ஊதியத்தில் மாற்றம் இல்லையென்ற போதும், அவர்கள் இருவரின் சந்தை மதிப்பில் பெரும் வித்தியாசத்தை பார்க்கலாம். தற்போது கோலி கேப்டன் பதவியில் இல்லாததால் அவரின் பிராண்ட் மதிப்பு குறைந்து விளம்பர தொகைகள் குறையலாம். இதே போல ரோகித் சர்மாவுக்கு ஏற்கனவே மும்பை அணி கேப்டன் என்ற முறையில் சந்தை மதிப்பு உள்ளது. இதில் தற்போது இந்திய அணியும் கேப்டன் பதவியும் இணைந்திருப்பதால் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.

Story first published: Friday, December 10, 2021, 15:17 [IST]
Other articles published on Dec 10, 2021
English summary
Rohit Sharma’s salary after he is takin charge as India’s full-time limited-overs captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X