ரோகித் சர்மாவின் புதிய க்யூட் சோசியல் மீடியா மேனேஜர்...

Rohith sharma Hit 400 International Sixes|400 சிக்ஸ் அடித்த முதல் இந்தியன் ரோஹித் சர்மா

நாக்பூர் : காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவரும் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவின் புதிய சமூகவலைதள மேனேஜர் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

காயம் காரணமாக இந்தியா திரும்பியுள்ள ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைரா இருவரும் இணைந்து சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்வதும், தன்னுடைய மகளின் அனுமதிக்காக ரோகித் சர்மா வேண்டி நிற்பதுமான வீடியோவை அவரது மனைவி ரித்திகா சச்தே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள மும்பை இந்தியன்ஸ், ரோகித் சர்மாவின் புதிய சமூக வலைதள மேனேஜர் எவ்வளவு க்யூட்டான இருக்கிறார் என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

காயம் காரணமாக ரோகித் விலகல்

காயம் காரணமாக ரோகித் விலகல்

இந்தியா -நியூசிலாந்து இடையிலான மூன்றாவது தொடர் நாளை மறுதினம் வெல்லிங்டனில் துவங்க உள்ளது. இதற்கென இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. கடந்த சர்வதேச டி20யின் இறுதிப்போட்டியின் போது காயம் ஏற்பட்டதையடுத்து அடுத்ததாக ஆடப்பட்ட ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறவில்லை.

குடும்பத்தினருடன் நேரம் பகிர்வு

குடும்பத்தினருடன் நேரம் பகிர்வு

காயம் காரணமாக இந்தியா திரும்பிய ரோகித் சர்மா அதற்கு சிகிச்சை பெற்று வருவதுடன், அடுத்தமாதம் 29ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இத்துடன் அவருடைய குடும்பத்தினர் குறிப்பாக மகள் சமைராவுடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ரோகித் வெளியிட்ட காதலர் தின பகிர்வு

ரோகித் வெளியிட்ட காதலர் தின பகிர்வு

மேலும் சமூக வலைதளங்களிலும் ரோகித் சர்மா குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் காதலர் தினத்தின்போது தன்னுடைய மனைவியுடனான புகைப்படத்தை பகிர்ந்த ரோகித் சர்மா, நாளை என்ற ஒருதினம் இல்லை என்னும் அளவிற்கு விருப்பத்திற்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோ பகிர்ந்த மனைவி

வீடியோ பகிர்ந்த மனைவி

இந்நிலையில் ரோகித்தின் புதிய சமூகவலைதள மேனேஜராக அவரது மகள் சமைரா விளங்கி வருகிறார். வலைதளங்களில் தான் பகிரும் புகைப்படங்களை சமைராவின் ஒப்புதலுடன் ரோகித் சர்மா பகிர்ந்து வருகிறார். இவர்களின் இந்த செயல்பாட்டை வீடியோவாக எடுத்த ரோகித்தின் மனைவி ரித்திகா சச்தே, அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "சமி ரோகித்தின் பகிர்வுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டதாக" அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

க்யூட்டான மேனேஜர் குறித்து கேள்வி

இந்நிலையில், இந்த வீடியோவின் ஒரு புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பகிர்ந்துள்ளது. அதில் போட்டோ, கேப்ஷன் மற்றும் ஹேஷ்டேக் போன்றவற்றை காண்பித்து ரோகித் சமைராவிடம் ஒப்புதல் கேட்பதாகவும், அதற்கு அவள் போஸ்ட் செய்ய ஒப்புதல் அளிப்பதாகவும் போடப்பட்டுள்ளது. மேலும் அந்த க்யூட்டான மேனேஜர் குறித்தும் மும்பை இந்தியன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

துவக்க வீரர்கள் சொதப்பல்

துவக்க வீரர்கள் சொதப்பல்

காயம் காரணமாக ரோகித் சர்மா இந்தியா திரும்பியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக, சர்வதேச ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வாலும், டெஸ்ட் தொடரில் சுப்மன் கில்லும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சர்வதேச ஒருநாள் தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை தரத்தவறியுள்ளனர். இதையடுத்து அந்த தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rohit Sharma's wife Ritika Sajdeh shared an adorable boomerang video
Story first published: Wednesday, February 19, 2020, 19:12 [IST]
Other articles published on Feb 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X