For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த தப்பை பண்ணிய ரோகித் சர்மா…. ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

Recommended Video

IPL 2019:Punjab vs Mumbai | டாஸ் வென்ற பஞ்சாப், பேட் செய்ய மும்பைக்கு அழைப்பு- வீடியோ

மும்பை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

சன்ரைசர்ஸ், பெங்களூர் அணிகள் இன்று மோதல்.. முதல் வெற்றியை பெறுமா கோலி அணி சன்ரைசர்ஸ், பெங்களூர் அணிகள் இன்று மோதல்.. முதல் வெற்றியை பெறுமா கோலி அணி

காக் அபார ஆட்டம்

காக் அபார ஆட்டம்

அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருக்கும்போது ரோகித் சர்மா 32 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய டி காக் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மும்பை 176 ரன்கள்

மும்பை 176 ரன்கள்

யுவராஜ் சிங், 18 ரன்னிலும், பொலார்டு 7 ரன்னிலும், குருணால் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியா 19 பந்தில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 31 ரன்னில் அவுட்டானார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.

ஆடிய பஞ்சாப்

ஆடிய பஞ்சாப்

இதை தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர்.

கெயில் 40 ரன்கள்

கெயில் 40 ரன்கள்

அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அகர்வால் 21 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்னில் அவுட்டானார்.

அரைசதம்

அரைசதம்

அவருக்கு அடுத்து மில்லர் இறங்கினார். மறுபுறம் ராகுல் தனது அதிரடியை தொடர்ந்து அரை சதமடித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

ரூ.12 லட்சம்

ரூ.12 லட்சம்

இந்நிலையில் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச மும்பை இந்தியன்ஸ் அணி அதிக நேரம் எடுத்து கொண்டது. அதனால் அந்த அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் விதி

ஐபிஎல் விதி

குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காதது ஐபிஎல் விதிகளின்படி தவறாகும். அந்த தவறை செய்த மும்பை அணிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது

Story first published: Sunday, March 31, 2019, 18:38 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
Rohit Sharma fined for slow over rate.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X