“சூர்யகுமார் இனி விளையாடமாட்டார்”.. பகிரங்கமாக அறிவித்த ரோகித் சர்மா.. காரணம் என்ன??

தென்னாப்பிரிக்காவுடனான 2வது டி20க்கு பிறகு ரோகித் சர்மா பேசிய விஷயம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs SA MOM விருதில் ஏற்பட்ட குளறுபடி KL Rahul வெளிப்படை பேச்சு

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 237/3 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 221 /3 ரன்களை மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

“எனக்கு கவலையே இல்ல”.. இந்திய அணி பவுலிங் ஏன் இவ்வளவு மோசம்.. ரோகித் சர்மா தடாலடி பதில்! “எனக்கு கவலையே இல்ல”.. இந்திய அணி பவுலிங் ஏன் இவ்வளவு மோசம்.. ரோகித் சர்மா தடாலடி பதில்!

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

238 என்ற கடினமான இலக்கையும் தென்னாப்பிரிக்கா விரட்டிய சூழலில், பேட்டிங்கால் மட்டுமே இந்தியா தப்பியது. குறிப்பாக சூர்யகுமாரின் பேட்டிங் தான். இந்தியா 107 - 2 என்ற நிலையில் இருந்தபோது கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களை விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கோலி 49 ரன்களை குவிக்க, இந்த ஜோடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ரோகித் சர்மா அறிவிப்பு

ரோகித் சர்மா அறிவிப்பு

இந்நிலையில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரோகித் சர்மா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யகுமார் யாதவை இனி விளையாடவைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் நேரடியாக அக். 23ம் தேதி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரை இதே போன்று மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார்.

சூர்யகுமார் விளக்கம்

சூர்யகுமார் விளக்கம்

இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம் என்றவுடனே திட்டமிட்டுவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பயிற்சியின் போதே எப்படி ஆடப்போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். முதலில் பேட்டிங் செய்யும் போது முடிந்தவரை அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் எனது திட்டம் எனக் கூறினார்.

இந்தியாவின் அடுத்த போட்டிகள்

இந்தியாவின் அடுத்த போட்டிகள்

இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 4ம் தேதி தென்னாப்பிரிக்காவுடனான 3வது டி20ல் மோதுகிறது. இதனை தொடர்ந்து 6ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் ரோகித் படை, அங்கு அக். 17 மற்றும் 19ம் தேதிகளில் ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma announces that he is thinking of not playing Surya anymore in the current south africa series
Story first published: Monday, October 3, 2022, 10:39 [IST]
Other articles published on Oct 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X