For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கோலியை “அன்-பாலோ” செய்த ரோஹித்.. ஏன், என்னாச்சு?

Recommended Video

ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கோலியை அன்-பாலோ செய்த ரோஹித்- வீடியோ

மும்பை : ரோஹித் சர்மா, விராட் கோலியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் "அன்-பாலோ" செய்து விட்டதாகவும், இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை எனவும் ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் விவாதம் நடத்தி வருகிறார்கள்.

ரோஹித் சர்மா சமீபத்தில் ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ரோஹித் சர்மாவுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் மறுக்கப்பட்டது. ஒருநாள், டி20 தொடர்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டும், கடந்த சில டெஸ்ட் தொடர்களில் அவர் அணியில் இடம் பிடிக்கவில்லை.

ரசிகர் ட்வீட்டை லைக் செய்த ரோஹித்

ஒருநாள் போட்டிகள், டி20 பேட்ஸ்மேன் என முத்திரை குத்தப்பட்டு அவர் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்காமல் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் போட்டி ஆவரேஜ் குறித்து போட்ட ட்வீட்டுக்கு ரோஹித் லைக் போட்டுள்ளார். அந்த ரசிகர், ஆறாம் இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் ஆவரேஜ் 58.19. உலகில் எந்த பேட்ஸ்மேனுடைய ஆவரேஜை விட இது அதிகம் என கூறியுள்ளார். அதற்கு லைக் போட்டதிலிருந்து அவருகுய் டெஸ்ட் போட்டிகளில் தன்னை எடுக்கவில்லை என்ற மனவருத்தம் இருப்பது தெரிகிறது.

கோலிக்கு எதிரான ட்வீட்டுக்கு லைக்

அதே போல, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு இந்திய அணியினர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா இடம் பெற்று இருந்தார். அது சரியா என கேள்வி எழுப்பி ஒரு ரசிகர் போட்ட ட்வீட்டை லைக் செய்தார் ரோஹித்.

கோலி - ரோஹித் இடையே உரசலா?

கோலி - ரோஹித் இடையே உரசலா?

தற்போது சில ரசிகர்கள் ரோஹித், கோலியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அன்-பாலோ செய்ததில் இருந்து இருவருக்கும் ஏதோ பிரச்சனை என கூற ஆரம்பித்துள்ளனர். அப்படி என்ன தான் இருவருக்கும் பிரச்சனை? ரோஹித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அதே போல, மூன்று முறை இரட்டை சட்டம் அடித்த ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் கூட சில சமயம் எடுக்கப்படாமல் விடப்பட்டு இருக்கிறார்.

ரோஹித் டெஸ்டில் ஏன் இல்லை?

ரோஹித் டெஸ்டில் ஏன் இல்லை?

இங்கிலாந்து தொடருக்கு முன், நடந்த ஆப்கன் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்தியா பல வீரர்களை வைத்து பரிசோதனை செய்தது. அப்போது கூட ரோஹித் அந்த அணியில் இல்லை. ரோஹித் தொடர்ந்து டெஸ்டில் இடம் மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி உள்ளது? ஒருவேளை அவருக்கு இடம் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் கோலிதான் என நினைக்கிறாரா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி

ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி

ரோஹித், கோலியை அன்-பாலோ செய்ததை வைத்து, பல சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள். உண்மையிலேயே ரோஹித் முன்பு கோலியை பின்தொடர்ந்தாரா? என்ற கேள்விக்கும் சிலர் ஆம் என பதில் அளித்துள்ளனர். இருவருக்கும் ஏதோ பிரச்சனை என தற்போது புகைய ஆரம்பித்துள்ளது. இது எங்கே போய் முடிகிறது என பார்க்கலாம்?

Story first published: Wednesday, September 5, 2018, 10:31 [IST]
Other articles published on Sep 5, 2018
English summary
Rohit sharma unfollowed Kohli in Twitter and Instagram. Any ego clash between them?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X