For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் வெற்றியைத் துரத்தியடித்த "சேஸ்"... 2வது டெஸ்ட் டிரா!

கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் ரோஸ்டன் சேஸ் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை சிதறடித்து விட்டார். அவரது அபாரமான ஆட்டத்தால் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து விட்டது.

இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் சேஸ் அதைப் போராடித் தவிடுபொடியாக்கி விட்டார். பந்து வீச்சின்போது 5 விக்கெட்களைச் சாய்த்த அவர், பேட்டிங்கில் சதம் அடித்து தனது ஆல்ரவுண்ட் திறமையையும் நிரூபித்தார், அணிக்கும் உதவினார்.

சேஸின் மிகச் சிறப்பான, பொறுப்பான ஆட்டம் காரணமாக இந்தியா தனது 2வது வெற்றியை இழந்தது. டிரா செய்து ஏமாற்றத்தைச் சந்தித்தது.

சேஸ் புதிய சாதனை

சேஸ் புதிய சாதனை

மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் ஒருவர் ஒரே போட்டியில் சதம் அடித்து, 5 விக்கெட்களயும் சாய்த்தது இது 4வது முறையாகும். நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ரன்களைக் குவித்தார் சேஸ்.

முதல் சதம்

முதல் சதம்

சேஸுக்கு இது முதல் டெஸ்ட் சதமும் ஆகும். இவரும் ஷேன் டோரிச்சும் சேர்ந்து போட்டியை மேற்கு இந்தியத் தீவுகள் பக்கமாக கொண்டு போய் விட்டனர். டோரிச் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கலக்கல் கேப்டன் ஹோல்டர்

கலக்கல் கேப்டன் ஹோல்டர்

அதேபோல கேப்டன் ஜேசன் ஹோல்டரும் பொறுப்பாக ஆடி அணியைத் தோல்வி முகத்திலிருந்து திருப்ப உதவினார. அவர் ஆட்டமிழக்காமல் 64 ரன்களை எடுத்தார்.

பிளாக்வுட் படுத்திய பாடு

பிளாக்வுட் படுத்திய பாடு

முன்னதாக பிளாக்வுட்டும், சேஸும் சேர்ந்து இந்தியப் பந்து வீச்சாளர்களைச் சோதித்து விட்டனர். பிளாக்வுட் அதிரடியாக ஆடி 63 ரன்களை எடுத்து அவுட்டானார். இவரை அஸ்வின் வெளியேற்றினார்.

அஸ்வினுக்கு அதிர்ஷ்டம் இல்லை

அஸ்வினுக்கு அதிர்ஷ்டம் இல்லை

நேற்று அஸ்வினுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ரன்களை வாரிக் கொடுத்த அவருக்கு ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. 114 ரன்களை விட்டுக் கொடுத்தார் அஸ்வின்.

சுருக்கமான ஸ்கோர்

சுருக்கமான ஸ்கோர்

மேற்கு இந்தியத் தீவுகள்: முதல் இன்னிங்ஸ் 196, 2வது இன்னிங்ஸ் - 8 விக்கெட் இழப்புக்கு 388. இந்தியா: முதல் இன்னிங்ஸ் - 9 விக்கெட் இழப்புக்கு 500 (டிக்ளேர்). சதங்கள்: இந்தியா 2 (கே.எல்.ராகுல் 158, ரஹானே ஆட்டமிழக்காமல் 108). மேற்கு இந்தியத் தீவுகள் - 1 (சேஸ் ஆட்டமிழக்காமல் 137).

Story first published: Friday, August 5, 2016, 8:10 [IST]
Other articles published on Aug 5, 2016
English summary
Roston Chase slammed his maiden Test century in the second innings of the second Test match against India here at Sabina Park as West Indies frustrated India with their resistence and avoided another innings defeat and the game ended in a draw.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X