For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனில் கும்ப்ளே பெஸ்ட்டுன்னா.. டிராவிட் அதில் மாஸ்டர்.. ஒரே நேரத்தில் 2 பேரை பாராட்டிய ஆர்பி சிங்

டெல்லி: இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர் பி சிங் ஒரே நேரத்தில் இரு லெஜன்டுகளைப் பாராட்டியுள்ளார். ஒருவர் கும்ப்ளே.. இன்னொருவர் ராகுல் டிராவிட்.

Recommended Video

RP Singh has Hails Kumble, Dravid and Dhoni

தான் விளையாடிய கேப்டன்களிலேயே சிறந்தவர் கும்ப்ளே என்று ஆர்பி சிங் மனதாரப் பாராட்டியுள்ளார். அதேபோல ராகுல் டிராவிட் டெக்னிக்கல் மாஸ்டர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மிகவும் குறுகிய காலமே இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் ஆர்.பி. சிங்.

தூக்கி எறிந்த சிஎஸ்கே.. பேச மறுத்த பிளெம்மிங்.. ஷாக் சம்பவம்.. ஐபிஎல் ரகசியத்தை உடைத்த அஸ்வின்!தூக்கி எறிந்த சிஎஸ்கே.. பேச மறுத்த பிளெம்மிங்.. ஷாக் சம்பவம்.. ஐபிஎல் ரகசியத்தை உடைத்த அஸ்வின்!

தனக்கு கும்ப்ளே நிறைய கற்றுக் கொடுத்தார் என்று பெருமையுடன் கூறியுள்ளார் ஆர்.பி. சிங். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றிப் பார்ப்பார் தோனி

மாற்றிப் பார்ப்பார் தோனி

எம்எஸ் தோனி ஒரு வித்தியாசமான கேப்டன். பந்து வீச்சாளர் நல்ல ரிதத்தில் இருந்தாலும் கூட பந்து வீச்சாளர்களை மாற்றிப் பார்ப்பார். அதேசமயம், ராகுல் டிராவிட் அப்படியே நேர் மாறானாவர். சரியாக இருந்தால் விட்டு விடுவார். அதிக ஓவர்களையும் போட விடுவார். அவர் டெக்னிக்கல் மாஸ்டர். அனில் கும்ப்ளே இன்னும் வித்தியாசமானவர் என்று ஆர்.பி. சிங் கூறியுள்ளார்.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

நம்மிடம் ஏதாவது சரியாக இருந்தால் அதை சுட்டிக் காட்டி இதை இப்படியே பாலோ பண்ணு என்பார். வேறு சிந்தனைக்குப் போகாதே என்றும் தட்டிக் கொடுப்பார். அவரே ஒரு பந்து வீச்சாளராகவும் இருந்ததால், டிராவிட் சிறந்த கேப்டனாக எளிதாக திகழ முடிந்தது. என்னைப் பொறுத்தவரை அவர் தான் சிறந்த கேப்டன். அவருக்குக் கீழ் நான் சில போட்டிகள்தான் ஆடினேன். பந்து வீச்சாளர்களின் மனதை சரியாக அறிந்தவர் அவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கும்ப்ளேவின் அட்வைஸ்

கும்ப்ளேவின் அட்வைஸ்

நான் இன்ஸ்விங் நிறைய வீசுவேன். அவர் என்னிடம் வந்து இது வேண்டாம் அவுட் ஸ்விங் போடு என்றார். அதை நான் பின்பற்றினேன். விக்கெட்டுகள் கிடைத்தன. ராகுல் டிராவிட் அப்படிச் செய்ய மாட்டார். அவர் நம்மிடம் இருக்கும் பிளஸ்ஸை ஹைலைட் பண்ணச் சொல்லுவார். கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான் நான் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானேன் என்றார் ஆர்பி சிங்.

அமைதியான கங்குலி

அமைதியான கங்குலி

ஜிம்பாப்வேயுடன் நடந்த 2005 போட்டியில் நான் முதல் ஓவரிலேயே நிறைய வைட் போட்டேன். ஆனால் கங்குலி அதை பெரிதுபடுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. கங்குலியைப் பொறுத்தவரை எனக்கு நிறைய அட்வைஸ் தரவில்லை. பந்தைக் கொடுத்து போடச் சொன்னார். முதல் பால் வைடு, 2வது பால் வைடு. எல்லோரும் டென்ஷனாகி விட்டார்கள். கங்குலி அமைதியாகவே இருந்தார். கவலைப்படாதே.. நாம ஜெயிச்சுடலாம் என்று மட்டும் சொன்னார் என்றார் சிங்.

என் நண்பன் தோனி

என் நண்பன் தோனி

ஆர்பி சிங் 2018ம் ஆண்டுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடியது 2011 ஆகும். அதன் பின்னர் 7 வருடம் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. தோனியை தனது நல்ல நண்பர் என்று எப்போதும் கூறுவார் ஆர்.பி. சிங். தோனியைப் போல வேறு யாருமே விளையாட்டை துல்லியமாக அறிந்து கொண்டதாக தனக்குத் தெரியவில்லை என்றும் கூறுவார் ஆர்.பி. சிங்.

Story first published: Monday, April 27, 2020, 16:56 [IST]
Other articles published on Apr 27, 2020
English summary
Former Fast Bowler RP Singh has Hails Anil Kumble and Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X