For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!

டெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த 14வது சீசனில் கோப்பையை கைப்பற்ற அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் அணியின் இயக்குநராக முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பான மாற்றங்கள்

சிறப்பான மாற்றங்கள்

ஐபிஎல் 2021 சீசனுக்காக தயாராகி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் கேரள அணியில் கேப்டனாக சாம்சனின் செயல்பாட்டை அடுத்து அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குமார சங்ககாரா நியமனம்

குமார சங்ககாரா நியமனம்

இந்நிலையில் அணியின் கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக அணியில் இணைந்து, அடுத்து வரவுள்ள ஐபிஎல் ஏலம், வீரர்களுக்கான கோச்சிங், அணியின் நிலைப்பாடு, வீரர்கள் தேர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார்.

சங்ககாரா மகிழ்ச்சி

சங்ககாரா மகிழ்ச்சி

இந்நிலையில் மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக உள்ள சங்ககாரா, இந்த புதிய சவால் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த வீரர்கள் அணியில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சங்ககாரா, அணியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

இந்நிலையில் சங்ககாரா போன்ற சிறப்பான வீரருடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அவரிடம் கற்று கொள்வது மிகவும் சிறப்பானது என்று அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இலங்கையை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் அவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 24, 2021, 19:26 [IST]
Other articles published on Jan 24, 2021
English summary
Sangakkara led Sri Lanka with grace and class throughout and has done it for Years -Samson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X