For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 ஓவரில் 4 விக்கெட்.. 13 ஓவர்களுக்கு நோ பவுண்டரி.. ராஜஸ்தானை சல்லி சல்லியாய் நொறுக்கிய மும்பை!

ஷார்ஜா: மும்பைக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில், இன்று (அக்.5) நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

ஷார்ஜாவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித், பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் வெறும் 90 ரன்களே எடுத்துள்ளது.

 ஆர்ஆர்... நார் நார்... சிஎஸ்கேவிடம் பொங்கி மும்பையிடம் அடங்கிய கத்துக்குட்டி ஐபிஎல் அணி! ஆர்ஆர்... நார் நார்... சிஎஸ்கேவிடம் பொங்கி மும்பையிடம் அடங்கிய கத்துக்குட்டி ஐபிஎல் அணி!

 ராஜஸ்தான் லெவன்

ராஜஸ்தான் லெவன்

இப்போட்டியில், மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கைரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். அதேபோல், ராஜஸ்தான் அணியில் எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (w/c), ஷிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோர் இடம்பெற்றனர்.

 வெற்றி தேடி வரும்

வெற்றி தேடி வரும்

இந்த போட்டியில், மும்பை அணியில் இரு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வந்த விக்கெட் டி காக் நீக்கப்பட்டு, வெளியே இருந்த இஷான் கிஷன் மீண்டும் அணியில் கொண்டுவரப்பட்டுள்ளார். அதேபோல், இம்பேக்ட் ஏற்படுத்த முடியாமல் தடுமாறி வந்த க்ருனால் பாண்ட்யா நீக்கப்பட்டு, நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? ஆட்டம் தான். டாஸ் போட்ட பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, முதலில் பேட்டிங் செய்தும் பார்த்துவிட்டோம், பவுலிங் செய்தும் பார்த்துவிட்டோம். எதுவும் பெரிதாக ஒர்க் ஆகவில்லை. ஸோ, இந்த போட்டியில் மீண்டும் சேஸிங் செய்யலாம் என்று நினைக்கிறோம். இலக்கை மனதில் வைத்து ஆடலாம் என்று இருக்கிறோம். எல்லா வியூகமும் எங்களிடம் பக்காவாக இருக்கிறது. அதை களத்தில் செய்லபடுத்துவதே எங்கள் நோக்கம். பாயிண்ட்ஸ் டேபிள் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படல. நன்றாக விளையாடினால் ஆட்டோமேட்டிக்காக வெற்றி எங்களைத் தேடி வரும் என்று கூறியுள்ளார்.

 டோட்டல் நம்பிக்கை காலி

டோட்டல் நம்பிக்கை காலி

இந்நிலையில், கடந்த போட்டியில், சென்னைக்கு எதிராக அரைசதம் அடித்து விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 12 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பிறகு, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் பும்ரா ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, 'இதோ வந்துட்டேன்' என்று கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவசர அவசரமாக நடையைக் கட்டினார். 41 ரன்களுக்கெல்லாம் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பிறகு டூபேவும் 3 ரன்களில் அவுட்டாக, நான்காவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். சென்னையை வெளுத்த அத்தனை வீரர்களும் 10 ஓவர்களுக்குள் அவுட்டாகி வெளியேறினார்கள்.

 வேற லெவல் டீம்

வேற லெவல் டீம்

இதன் பிறகு, ராஜஸ்தான் அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. க்ளென் ஃபிலிப்ஸ் வெறும் 4 ரன்களில், கோல்டர் நைல் ஓவரில் போல்டாக, ராஜஸ்தான் 50 ரன்களுக்கெல்லாம் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. அதவாது, 13 ஓவர்களுக்கு அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. சென்னைக்கு எதிராக 2 ஓவர்கள் மீதம் வைத்து 190 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான், 13 ஓவர்களுக்கு எடுத்திருந்த ரன்கள் 62. (வேற லெவல் டீம் நீங்க.. போங்க) 6வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் - தெவாட்டியா ஜோடி சேர்ந்தும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

Story first published: Tuesday, October 5, 2021, 21:26 [IST]
Other articles published on Oct 5, 2021
English summary
rr set 91 runs target to mumbai indians ipl 2021 - மும்பை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X