For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வழுக்கி விழுந்து.. பௌலரை மிரள வைத்து.. கடைசி ஓவரில் காமெடி சிக்ஸ் அடித்த ஜடேஜா!

Recommended Video

வழுக்கி விழுந்து காமெடி சிக்ஸ் அடித்த ஜடேஜா!

ஜெய்ப்பூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி கடைசி ஓவரில், கடைசி பந்தில் வென்றது.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சர்ச்சை, முக்கிய விக்கெட், மோசமான பந்துவீச்சு, கடைசி பந்தில் சிக்ஸ் என எல்லாம் நிறைந்த மசாலா ஓவர் இருந்திருக்குமா என்பது சந்தேகமே!! இதில் காமெடி மட்டும் மிஸ் ஆகுதே என்கிறீர்களா? அதுவும் உண்டு. அந்த காமெடியை செய்தது நம்ம ஜடேஜா.

களத்துல மொறப்போம், வெளில வெள்ளந்தியா சிரிப்போம்... ராஜஸ்தானுக்கு மெசேஜ் சொன்ன அந்த சென்னை வீரர் களத்துல மொறப்போம், வெளில வெள்ளந்தியா சிரிப்போம்... ராஜஸ்தானுக்கு மெசேஜ் சொன்ன அந்த சென்னை வீரர்

முதல் பந்து

முதல் பந்து

கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணியில் ஜடேஜா - தோனி களத்தில் இருந்தனர். முதல் பந்தை ஜடேஜா சந்தித்தார். பென் ஸ்டோக்ஸ் பந்தை அவுட்சைடு ஆஃப் திசையில் வீசினார்.

வழுக்கி விழுந்தார்

வழுக்கி விழுந்தார்

ஜடேஜா பந்தை அடிக்க முற்பட்ட போது கால் தடுமாறி வழுக்கி விழுந்தார். எனினும், நேர் திசையில் ஸ்டோக்ஸ் தலைக்கு மேல் பந்தை அலேக்காக தூக்கி அடித்தார். ஜடேஜா கீழே விழுந்து, மேலே சென்ற பந்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.

மிரண்ட பென் ஸ்டோக்ஸ்

மிரண்ட பென் ஸ்டோக்ஸ்

இதைக் கண்ட பென் ஸ்டோக்ஸ், என்னவோ, ஏதோ என மிரண்டு அவரும் கீழே விழுந்து விட்டார். ஆனால், பறந்து சென்ற பந்து அதற்குள் பவுண்டரி எல்லையை தொட்டு சிக்ஸ் ஆனது. என்னப்பா நடந்தது என புரிந்து கொள்ளவே அனைவருக்கும் சில வினாடிகள் ஆனது.

காமெடி சிக்ஸ்

எதிர்முனையில் இருந்த தோனி, ஜடேஜா அடித்த காமெடி சிக்ஸ்-ஐ பார்த்து சிரித்துக் கொண்டே வந்து அவர் தலையில் செல்லமாக பேட்டால் அடிப்பது போல பாவனை செய்தார். ஜடேஜா அடித்த இந்த சிக்ஸ் ஐபிஎல் வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

Story first published: Friday, April 12, 2019, 13:49 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
RR vs CSK IPL 2019 : Jadeja’s unbelievable six at the last over
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X