எங்கு போனாலும் சிஎஸ்கே ரசிகர்கள்.. எப்படி இது? உண்மையை போட்டுடைத்த பிராவோ!

IPL 2019:Chennai vs Rajastan | எங்கும் சிஎஸ்கே ரசிகர்கள், எப்படி?.. பிராவோ சொல்கிறார்- வீடியோ

ஜெய்ப்பூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் வேறு எந்த அணிக்கும் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு காரணம் தோனி தான் என கூறி உள்ளார் பிராவோ.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை தவிர்த்து பிற அணிகளின் மைதானங்களில் ஆடும் போதும் பெரும் ரசிகர் பட்டாளத்தின் ஆதரவை பெற்று வருகிறது.

1
45901

எங்கு சென்றாலும் மஞ்சள் நிறம்

இந்த பண்டியா சும்மாவே இருக்க மாட்டார் போலையே.. பஞ்சாப் வீரரை வம்புக்கு இழுத்த ஹர்திக் பண்டியா!

மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறம்

டெல்லி, ஹைதராபாத், மும்பை என எங்கு சென்றாலும் மஞ்சள் நிற சிஎஸ்கே உடை அணிந்து சென்னை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருவது குறித்து பேசிய பிராவோ, அதில் பலர் சிஎஸ்கே ரசிகர்கள் இல்லை. தோனி ரசிகர்கள் என கூறினார்.

சிறப்பாக ஆடும் அணி

சிறப்பாக ஆடும் அணி

சென்னை அணி ஆடும் போட்டிகள் மட்டுமல்லாமல், பயிற்சியின் போது கூட 10,000க்கும் அதிகமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடினர். சிறப்பாக ஆடி வரும் அணி என்பதால் தான் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என கூறுகிறார் பிராவோ.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதனால், சென்னை அணி எந்த இடத்தில் ஆடினாலும், அதை தன் சொந்த மைதானமாக மாற்றி விடுகிறது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தான் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், சென்னை அணி இரு ஆண்டுகள் தடைக்குப் பின் ஐபிஎல் தொடரில் ஆடி கோப்பையை வென்றது தான் என கூறப்படுகிறது.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

சென்னை அணி இதுவரை தான் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. தன் அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று சந்திக்க உள்ளது சென்னை.

 
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
RR vs CSK IPL 2019 : Lot of CSK fans are Dhoni fans says Dwayne Bravo
Story first published: Thursday, April 11, 2019, 12:19 [IST]
Other articles published on Apr 11, 2019
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more