For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப பயம் வருதா? பழைய பகை.. வைச்சு செய்யும் ஜடேஜா.. ஸ்டீவ் ஸ்மித் டீமுக்கு காத்திருக்கும் அடி!

ஷார்ஜா : ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கப் போகிறார் ஜடேஜா.

இது இன்று நேற்றல்ல, அந்த அணியை விட்டு அவர் விலகியதில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

பழைய பகையை மனதில் வைத்தோ என்னவோ, ஜடேஜா மற்ற அணிகளை விட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மட்டும் தனியாக "கவனித்து" வருகிறார்.

சந்தோஷமா இருக்கு... சூப்பர் வெற்றி.. விசில் போடும் ரவீந்திர ஜடேஜா சந்தோஷமா இருக்கு... சூப்பர் வெற்றி.. விசில் போடும் ரவீந்திர ஜடேஜா

சிஎஸ்கே வெற்றிநடை

சிஎஸ்கே வெற்றிநடை

சிஎஸ்கே அணி 2010 ஐபிஎல் தொடரில் வெற்றிநடை போடத் துவங்கி உள்ளது. முதல் போட்டியிலேயே வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது. மேலும், அணியின் சமநிலை சிறப்பாக இருப்பதால் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது.

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டி

சிஎஸ்கே அணியின் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டி செப்டம்பர் 22 அன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் கையே ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருப்புச் சீட்டு யார்?

துருப்புச் சீட்டு யார்?

சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துருப்புச் சீட்டாக இருப்பார் என கருதப்படுகிறது. காரணம், மற்ற அணிகளை விட அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தான்.

ராஜஸ்தானுக்கு ஆடிய ஜடேஜா

ராஜஸ்தானுக்கு ஆடிய ஜடேஜா

2008 மற்றும் 2009 ஐபிஎல் தொடரில் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். அடுத்த நட்சத்திர வீரர் என அந்த அணியால் முன்னிறுத்தப்பட்டார். எனினும், 2010இல் ஜடேஜா, வேறு அணிக்கு தாவ முயன்றதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூறியது.

பழைய பகை

பழைய பகை

தங்களின் அனுமதி இல்லாமல் மற்ற அணிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி புகார் அளித்தது. இதை அடுத்து அவர் ஓராண்டுக்கு தடை செய்யப்பட்டார். அதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ஜடேஜா.

கை கொடுத்த சிஎஸ்கே

கை கொடுத்த சிஎஸ்கே

அதன் பின் சிஎஸ்கே அணி ஜடேஜாவை தங்கள் அணியில் இன்று வரை தொடர்ந்து ஆடவைத்து வருகிறது. அவரை அணியின் முக்கிய வீரராக நடத்தி வருகிறது. ஜடேஜா சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு நகர்விலும் தன் பங்களிப்பை அளித்துள்ளார்.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

அவர் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை விட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் மிக சிறப்பாக பந்து வீசி உள்ளார். அந்த அணிக்கு எதிராக 14 இன்னிங்க்ஸ்களில் 16 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். சராசரி 19 ஆகும். மற்ற அணிகளை விட ராஜஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் விகிதம் மற்றும் குறைந்த சராசரி வைத்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்

அதே போல, அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அதிக முறை வீழ்த்தி உள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தை 11 இன்னிங்க்ஸ்களில் 5 முறை வீழ்த்தி உள்ளார். இதற்கு முன் ராஜஸ்தான் அணியில் ஆடிய ஷேன் வாட்சனை 8 இன்னிங்க்ஸ்களில் 5 முறை வீழ்த்தி உள்ளார்.

தப்பித்த வாட்சன்

தப்பித்த வாட்சன்

ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேனை ஜடேஜா அதிக முறை வீழ்த்திய பட்டியலில் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித் ,முதல் இடத்தில் உள்ளனர். ஷேன் வாட்சன் தற்போது சிஎஸ்கே அணியில் ஆடி வருவதால் அவர் ஜடேஜாவிடம் இருந்து தப்பினார். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஜடேஜாவிம் சிக்குவாரா?

Story first published: Tuesday, September 22, 2020, 20:20 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs CSK - Ravindra Jadeja vs Rajasthan Royals and Steve Smith. Here is the interesting stats.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X