For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இளம் வீரர் செய்த காரியம்.. அடுத்த பிராவோ.. புகழ்ந்து தள்ளிய பிளெம்மிங்.. வியந்து போன தோனி!

ஷார்ஜா : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலவீனமாக இருப்பதாக முதல் போட்டிக்கு முன் பேசியவர்களை எல்லாம் ஏளனம் செய்து பலமான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

அந்தப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் பங்கேற்றார்.

அவர் இரு நாட்கள் முன்பு தான் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார். அணிக்காக எதையும் பொருட்படுத்தாமல் அவர் ஆடியது தோனி, பிளெம்மிங்கை வியக்க வைத்துள்ளது.

4 கோடி ஏமாத்திட்டாங்க.. சென்னை காவல்துறையிடம் ஹர்பஜன் சிங் பரபரப்பு புகார்!4 கோடி ஏமாத்திட்டாங்க.. சென்னை காவல்துறையிடம் ஹர்பஜன் சிங் பரபரப்பு புகார்!

முதல் போட்டி

முதல் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு செல்லும் முன்பு வரை சிஎஸ்கே அணியில் என்னென்ன பலவீனம் உள்ளது என்பது பற்றியே முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் பேசி வந்தனர்.

சிஎஸ்கே சிக்கல்

சிஎஸ்கே சிக்கல்

சிஎஸ்கே அணியில் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகியது பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், அனுபவ ஆல் - ரவுண்டர் பிராவோ காயத்தால் முழு உடற்தகுதியுடன் ஆட முடியாத நிலையில் இருந்தார். அவருக்கு மாற்றாக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருந்தது.

சாம் கர்ரன் தேர்வு

சாம் கர்ரன் தேர்வு

இந்த நிலையில் தான் இளம் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன் தேர்வு செய்யப்பட்டார். அவரது வயது 22 தான். அவர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்தா கையோடு ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்தார்.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

முதல் போட்டியில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், லுங்கி நிகிடியை விட குறைவான ரன்களே கொடுத்து இருந்தார். அவரது செயல்பாடு அப்போதே கவனத்தை ஈர்த்தது.

மிரட்டல் பேட்டிங்

மிரட்டல் பேட்டிங்

அடுத்து சேஸிங்கில் சிஎஸ்கே அணியின் ரன் விகிதத்தை உயர்த்த அதிரடியாக ஆடுமாறு கூறி அனுப்பப்பட்டார் சாம் கர்ரன். கேப்டன் தோனி சொன்னதை அப்படியே செய்தார். 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்தார். 1 ஃபோர், 2 சிக்ஸ் அதில் அடங்கும்.

பயண அலுப்பு

பயண அலுப்பு

18 ரன்கள் என்றாலும் அது சிஎஸ்கே அணியை அழுத்தம் இல்லாமல் சேஸிங்கை முடிக்க பெரிய அளவில் உதவியது. சாம் கர்ரன் இந்த சிறப்பான செயல்பாட்டை தன் பயண அலுப்பு, புதிய இடத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது என பல விஷயங்களுக்கு நடுவே செய்து காட்டியுள்ளார்.

வியந்து போன தோனி

வியந்து போன தோனி

சாம் கர்ரன் சிஎஸ்கே அணிக்காக முழுமையாக அர்ப்பணித்து ஆடியது கேப்டன் தோனியை வியப்புக்கு உள்ளாக்கி இருப்பதாக பிளெம்மிங் கூறி உள்ளார். குறிப்பாக பிராவோ இடத்தை அவர் நிரப்பியது சிஎஸ்கே அணியை பலமான அணியாக மாற்றி இருப்பதும் தோனிக்கு நிம்மதி அளித்துள்ளது.

பிளெம்மிங் பாராட்டு

பிளெம்மிங் பாராட்டு

பயிற்சியாளர் பிளெம்மிங் கூறுகையில், பிராவோ இல்லாதது பெரிய இழப்பாகும். சாம் கர்ரன் நீண்ட தூரம் சென்று அவரது இடத்தை நிரப்பி இருக்கிறார். முக்கியமான நேரத்தில் அவர் அணிக்கு உதவியது கேப்டனின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றார்.

பிராவோ இடத்தை பிடித்தார்

பிராவோ இடத்தை பிடித்தார்

சிஎஸ்கே அணி சாம் கர்ரனை தங்கள் அணியில் தொடர்ந்து தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பிராவோ இடத்தை நிரப்ப சாம் கர்ரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே செய்தும் காட்டி உள்ளார் அந்த இளம் வீரர்.

Story first published: Tuesday, September 22, 2020, 16:32 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs CSK - Sam Curran fills gap of Dwayne Bravo who is not playing due to injury .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X