For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

19 பந்தில் 50.. 9 சிக்ஸ்.. கிழித்து தொங்கவிட்ட சஞ்சு சாம்சன்.. அரண்டு போன சிஎஸ்கே!

ஷார்ஜா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக சிக்ஸ் மழை பொழிந்து 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

சிஎஸ்கே அணி இந்த அதிரடியை எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் ஜடேஜா, தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா என சிஎஸ்கே அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களின் ஓவர்களை தெறிக்க விட்டார் சாம்சன்.

பேசியும் பலன் இல்லை.. களத்தில் டென்சன் ஆன தோனி.. சிஎஸ்கேவின் பிரம்மாஸ்திரத்தையே காலி செய்த சஞ்சு! பேசியும் பலன் இல்லை.. களத்தில் டென்சன் ஆன தோனி.. சிஎஸ்கேவின் பிரம்மாஸ்திரத்தையே காலி செய்த சஞ்சு!

நான்காவது லீக் போட்டி

நான்காவது லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வலுவான அணியாக களமிறங்கியது. அம்பதி ராயுடுவுக்கு பதில் ருதுராஜ் கெயிக்வாட் அணியில் இடம் பெற்றார்.

ராஜஸ்தான் சந்தேகம்

ராஜஸ்தான் சந்தேகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் தன் முதல் போட்டியில் ஆடியதால் எப்படி சிஎஸ்கே அணியை எதிர்கொள்ளப் போகிறது என்ற சந்தேகம் இருந்தது. சிஎஸ்கே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சேஸிங் செய்யும் அணிக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால் ராஜஸ்தான் அணிக்கு அப்போதே பின்னடைவு ஏற்பட்டது.

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - ஜெய்ஸ்வால் துவக்கம் அளித்தனர். தன் முதல் ஐபிஎல் போட்டியில் ஆடிய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் உடன் இணைந்தார். அவர் அதிரடி ஆட்டம் ஆடினார்.

அடிச்சா சிக்ஸ் தான்

அடிச்சா சிக்ஸ் தான்

ஃபோர் அடித்து நேரத்தை வீணடிக்க விரும்பாத சஞ்சு சாம்சன் வெறும் சிக்ஸராக அடித்து மிரட்டினார். சாம் கர்ரன் ஓவரில் சிக்ஸ் அடித்து தன் வேட்டையை ஆரம்பித்தார். அடுத்து தீபக் சாஹர் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார்.

தோனி செய்த தவறு

தோனி செய்த தவறு

அடுத்து தோனி ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார். சஞ்சு சாம்சன் சுழற் பந்துவீச்சை இன்னும் அதிகமாக வெளுத்து எடுத்தார். ஜடேஜா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் பறந்தது. அதன் பின் தோனி பியுஷ் சாவ்லாவை அழைத்தார்.

சாவ்லா ஓவரில் 4 சிக்ஸ்

சாவ்லா ஓவரில் 4 சிக்ஸ்

பியுஷ் சாவ்லா ஓவரில் 4 சிக்ஸ் அடித்து 28 ரன்கள் சேர்த்து மிரள வைத்தார் சஞ்சு சாம்சன். அப்போதே சிஎஸ்கே வீரர்கள் முகம் மாறியது. தோனி இறுக்கமாக இருந்தார். உடனே டைம் அவுட் கோரியது சிஎஸ்கே. அப்போதும் தோனி தன் முடிவை மாற்றவில்லை.

ஸ்மித்தும் ஜோடி சேர்ந்தார்

ஸ்மித்தும் ஜோடி சேர்ந்தார்

அடுத்த ஓவரை ஜடேஜா வசம் அளித்தார். அந்த ஓவரில் பவுண்டரி எதுவும் செல்லவில்லை. அதன் பின் மீண்டும் சாவ்லாவுக்கு ஓவர் கொடுத்தார் தோனி. சாம்சனுடன், ஸ்மித்தும் சேர அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் போனது.

9 சிக்ஸ்

9 சிக்ஸ்

அடுத்து ஜடேஜா ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார் சாம்சன். 9 சிக்ஸ் அடித்து மிரட்டினார் சாம்சன். 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்த நிலையில் நிகிடி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். அவரது ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு பெரிய அடியாக அமைந்தது.

அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம்

19 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த சஞ்சு சாம்சன் முக்கிய சாதனை ஒன்றை செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லருக்கு அடுத்த இடத்தை பெற்றார். பட்லர் கடந்த சீசனில் 18 பந்துகளில் அரைசதம் கடந்து இருந்தார்.

Story first published: Tuesday, September 22, 2020, 21:35 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs CSK : Sanju Samson hit 19 ball fifty He hit 6 sixes before hitting fifty.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X