For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் செஞ்சது தப்புன்னா.. ஜோஸ் பட்லர் செஞ்சது மட்டும் சரியா? அஸ்வினுக்கு ஷாக் கொடுத்துட்டாரே!!

Recommended Video

Butler refused handshake | அஸ்வினுக்கு பதிலடி கொடுத்த பட்லர்

ஜெய்ப்பூர்: 2019 ஐபிஎல் தொடரின் முதல் சர்ச்சையான அஸ்வின் - பட்லர் ரன் அவுட் சர்ச்சையில் அஸ்வின் மீது மட்டுமே பலரும் புகார் கூறி வந்த நிலையில், பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டிக்கு பின் ஜோஸ் பட்லர் செய்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு, சிலர் அவர் செய்ததும் தவறு என கூறி வருகின்றனர்.

அந்த போட்டியில் அஸ்வின் பந்து வீசும் முன், எதிர்முனை பேட்ஸ்மேன் பட்லர், கிரீஸை விட்டு முன்னேறிச் சென்றார். அதை பயன்படுத்தி அஸ்வின் ரன் அவுட் செய்தார்.

பரபரப்பா டி20 போட்டி ஆடுவாங்கன்னு பார்த்தா 2 கேப்டன்களும் என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!! பரபரப்பா டி20 போட்டி ஆடுவாங்கன்னு பார்த்தா 2 கேப்டன்களும் என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

எழுதப்படாத நெறி

எழுதப்படாத நெறி

சிலர் அஸ்வின், பட்லர் வெளியேறும் வரை காத்திருந்து ரன் அவுட் செய்தார் எனவும் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கிரிக்கெட் விளையாட்டின் எழுதப்படாத நெறியாக, இது போன்ற நேரத்தில் பேட்ஸ்மேனை எச்சரிப்பது நடைமுறையாக உள்ளது. ஆனால், அஸ்வின் எச்சரிக்காமல், அவுட் செய்தார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அதனால், களத்திலேயே அஸ்வின் - பட்லர் இடையே சிறிய வாக்குவாதம் எழுந்தது. எனினும், அம்பயர் அவுட் கொடுத்து விட்டதால் பட்லர் முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். அதன் பின்னும் கோபமாக இருந்துள்ளார்.

திருப்புமுனை

திருப்புமுனை

பட்லர் விக்கெட் மூலம் திருப்புமுனை பெற்ற பஞ்சாப் அணி அடுத்து விக்கெட் வேட்டை நடத்த, இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. கேப்டன் அஸ்வின் சர்ச்சைக்குரிய முறையில் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார் என்பதே தலைப்பு செய்தியாக அமைந்தது.

அதிர்ச்சியில் ஆழ்ந்தார்

போட்டி முடிந்த பின் பஞ்சாப் அணி வீரர்கள், ராஜஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்கிச் சென்றனர். அப்போது பட்லர், அஸ்வினுக்கு கை குலுக்காமல் சென்றார். அதைக் கண்ட அஸ்வின், ஒரு கணம் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்தார்

நெறிப்படி தவறு

நெறிப்படி தவறு

இந்த சம்பவத்தை குறிப்பிடும் சிலர், அஸ்வின் செய்தது நெறிப்படி தவறு என்றால், பட்லர் முகம் காட்டாமல் சென்றதும் விளையாட்டு நெறிப்படி தவறு தான். போட்டி முடிந்தவுடன் கை குலுக்குவது என்பதே களத்தில் நடந்த சம்பவங்களை மறந்து நண்பர்களாக பிரிவது என்பதைக் குறிப்பது தான்.

அஸ்வினை புறக்கணித்தார்

அஸ்வினை புறக்கணித்தார்

ஆனால், அப்போது பட்லர் ஏன் அப்படி முகம் காட்டாமல், அஸ்வினை புறக்கணித்தார் என கேட்டு வருகின்றனர். சிலர் பட்லர் இப்படி நடந்து கொண்டதன் மூலம், அஸ்வினுக்கு செம பதிலடி கொடுத்துவிட்டார் எனவும் கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, March 26, 2019, 20:17 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
RRvKXIP IPL 2019 : Jos Buttler was angry, refused to shake hands with Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X