For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின்.. நீங்க இப்படி செய்யலாமா? பந்து வீசி அவுட்டாக்க முடியலைனா இப்படியா செய்வாங்க?

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே ஆன நான்காவது ஐபிஎல் போட்டியில் பெரிய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்துள்ளார் அஸ்வின்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 184 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் 79, சர்ப்ராஸ் கான் 46 ரன்கள் எடுத்தனர்.

என்ன கொடுமை சார் இது.. அஸ்வின், ரஹானே நிலைமையை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு!! என்ன கொடுமை சார் இது.. அஸ்வின், ரஹானே நிலைமையை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு!!

ரஹானே - பட்லர்

ரஹானே - பட்லர்

அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வந்தது. அந்த அணிக்கு துவக்கம் அளித்த ரஹானே - பட்லர் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ரஹானே அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் திணறல்

அஸ்வின் திணறல்

எனினும் பட்லர் அதிரடியை தொடர்ந்து வந்தார். அவரை வீழ்த்த முடியாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் திணறி வந்தார். 13வது ஓவரில் அஸ்வின் பந்து வீசினார். ஐந்தாவது பந்தை அவர் வீச வந்த போது, சிறிது மெதுவாக நின்றார்.

கிரீஸை..

கிரீஸை..

அந்த இடைவெளியில், அஸ்வின் பந்து வீசும் முனையில் நின்று கொண்டிருந்த பட்லர், ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் சாம்சன் பந்தை அடித்தால் ஓடுவதற்காக சில அடி முன்னே வைத்து கிரீஸை தாண்டி நின்றார்.

அம்பயர் அவுட் கொடுத்தார்

அம்பயர் அவுட் கொடுத்தார்

இதை பயன்படுத்திக் கொண்ட அஸ்வின், பந்து வீசாமல், பெயில்சை தட்டி விட்டு பட்லருக்கு ரன் அவுட் கேட்டார். கள அம்பயர், மூன்றாவது அம்பயரை அணுகினார். அவர் அவுட் கொடுக்க பட்லர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பட்லர் கோபம்

பட்லர் கோபம்

இதற்கிடையே, பட்லர் - அஸ்வின் இடையே சிறிய வாக்குவாதம் வெடித்தது. பெரும் கோபத்தில் இருந்த பட்லர், அஸ்வின் வேண்டுமென்றே மெதுவாக நின்று விக்கெட்டை எடுத்ததாக குற்றம் சாட்டினார்.

அஸ்வின் பதில்

அஸ்வின் பதில்

அஸ்வின், பதிலுக்கு "நீ கிரீஸில் நிற்கவில்லை, என் பந்துவீச்சை தடுத்துக் கொண்டு இருக்கிறாய்" என கத்தினார். இதனால், பெரும் பரபரப்பு எழுந்தது. உண்மையில், கிரிக்கெட்டில் எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு முன்னேறும் போது ரன் அவுட் செய்தால் அது அவுட் தான்.

அடிப்படை தர்மம்

அடிப்படை தர்மம்

ஆனால், முதலில் அந்த தவறு நடக்கும் போது எதிரணி அவரை எச்சரிக்கும். தொடர்ந்து அவர் அதே தவறை செய்தால் மட்டுமே ரன் அவுட் செய்ய முயற்சிக்கும். இது கிரிக்கெட்டில் எழுதப்படாத அடிப்படை தர்மமாக இருந்து வருகிறது.

எச்சரிக்கவில்லை

எச்சரிக்கவில்லை

ஆனால், அஸ்வின், பட்லர் ரன் குவிப்பை நிறுத்த முடியாமல், கிட்டத்தட்ட திட்டம் போட்டு இப்படி ரன் அவுட் செய்தது போன்று தான் இருந்தது. ஒருமுறை கூட பட்லரை அவர் எச்சரிக்கவில்லை.

வாக்குவாதம்

வாக்குவாதம்

தற்போது இந்த செயல் இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதங்களை கிளப்பி விட்டுள்ளது. பலர் அஸ்வின் செய்தது தவறு என கூறி வரும் நிலையில், கிரிக்கெட் விதிகளை ஆதரமாகக் காட்டி இது சரி தான் எனவும் கூறி வருகின்றனர்.

கடுப்பில் செய்தார்

கடுப்பில் செய்தார்

ஆனால், அஸ்வின் ரன் அவுட் செய்து விட்டு வாக்குவாதம் செய்ததை பார்த்தால், விக்கெட் விழாத கடுப்பில் தான் இப்படி செய்துள்ளார் என சிலர் குறிப்பிட்டு கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, March 26, 2019, 9:06 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
RRvKXIP IPL 2019 : Ashwin created huge controversy with Jos Buttler run out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X