For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிறிஸ் கெயில் சரவெடி.. ரெய்னா, கோலி, வார்னரை ஓரங்கட்டினார்.. ஐபிஎல்-இல் புதிய சாதனை!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் என்றாலே சரவெடி தான். அதிக சிக்ஸர் அடித்து ஐபிஎல்-இல் சாதனை செய்திருக்கும் கெயில், ரன்கள் குவிப்பதிலும் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மிக விரைவாக 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் கெயில்.

சோனமுத்தா போச்சா.. 8.4 கோடி கொடுத்து வருண் சக்கரவர்த்தியை வாங்குனீங்க.. இப்படி புட்டுகிச்சே! சோனமுத்தா போச்சா.. 8.4 கோடி கொடுத்து வருண் சக்கரவர்த்தியை வாங்குனீங்க.. இப்படி புட்டுகிச்சே!

புதிய சாதனை

புதிய சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடந்த போட்டியில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் 6 ரன்களை கடந்த போது கெயில் புதிய சாதனை செய்தார்.

வார்னரை முந்தினார்

வார்னரை முந்தினார்

ஐபிஎல் தொடரில் 113 போட்டிகளில் 112 இன்னிங்க்ஸ்களில் 4000 ரன்களை கடந்தார் கிறிஸ் கெயில். ஐபிஎல் வரலாற்றில் மிக விரைவாக 4000 ரன்களை எட்டி இருக்கும் கெயில், வார்னரை முந்தி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

ஓரங்கட்டிய கெயில்

ஓரங்கட்டிய கெயில்

4000 ரன்களை வார்னர் 114 இன்னிங்க்ஸ்களிலும், விராட் கோலி 128 இன்னிங்க்ஸ்களிலும், ரெய்னா மற்றும் கம்பீர் 140 இன்னிங்க்ஸ்களிலும் கடந்துள்ளனர். இவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி இருக்கிறார் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்.

வார்னருக்குப் பின்

வார்னருக்குப் பின்

மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் கெயில் 4000 ரன்களை கடந்த ஒன்பதாவது வீரர் ஆவார். மேலும், வெளிநாட்டு வீரர்களில் இரண்டாவதாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். முதலில் இந்த மைல்கல்லை எட்டிய வெளிநாட்டு வீரர் வார்னர்.

கெயில் சதம்

கெயில் சதம்

இது தவிர கெயில் ஐபிஎல் தொடரில் 5 சதம் அடித்துள்ளார். இதுவே ஐபிஎல் தொடரில் அதிகம். மேலும், 2013இல் கெயில் அடித்த 175 ரன்களே ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.

Story first published: Monday, March 25, 2019, 22:46 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
RRvKXIP IPL 2019 : Chris Gayle cross 4000 runs in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X