For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின்.. என்ன செஞ்சு வச்சுருக்கீங்க.. தவறான பாதையை காட்டிட்டீங்களே!! பொங்கிய இங்கிலாந்து வீரர்கள்!

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் - பஞ்சாப் இடையே நடந்த 2019 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின். "மன்கட்" முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை ரன் அவுட் செய்தார்.

ஸ்ட்ரைக் பேட்ஸ்மேனுக்கு எதிர்புறம் நிற்கும் பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் பந்து வீசும் முன் கிரீஸை விட்டு தாண்டிச் சென்றால் பந்துவீச்சாளர் ரன் அவுட் செய்ய முடியும். இது தான் மன்கட் எனும் ரன் அவுட் முறை.

பிளான் பண்ணி பண்ணலை.. ரூல்ஸ் இருக்கும் போது ஏன் நியாயம், தர்மம் பார்க்குறீங்க? அஸ்வின் தடாலடி! பிளான் பண்ணி பண்ணலை.. ரூல்ஸ் இருக்கும் போது ஏன் நியாயம், தர்மம் பார்க்குறீங்க? அஸ்வின் தடாலடி!

இங்கிலாந்து வீரர்கள் பொங்கினர்

இங்கிலாந்து வீரர்கள் பொங்கினர்

இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லரை, அஸ்வின் ரன் அவுட் செய்த விதத்தை கண்டு இங்கிலாந்து வீரர்கள் ட்விட்டரில் பொங்கி உள்ளனர். இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் இயான் மார்கனும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருப்பது, இது எத்தனை பெரிய தாக்கத்தை கிரிக்கெட் உலகில் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது.

நம்ப முடியவில்லை

இயான் மார்கன் தன் பதிவில், "நான் என்ன பார்க்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இளம் சிறுவர்களுக்கு தவறான உதாரணமாக இது அமைந்துள்ளது. நேரம் வரும் போது அஸ்வின் இது குறித்து வருந்துவார்." என கூறியுள்ளார்.

அதிர்ச்சியாக இருந்தது

மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் கூறுகையில், "அஸ்வின்.. அது அதிர்ச்சியாக இருந்தது. அதைப் பார்க்க மிகவும் ஏமாற்றமாக இருந்தது." என கூறியுள்ளார்.

மைக்கேல் வான் கருத்து

மைக்கேல் வான் கருத்து

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறுகையில், "ஜோஸ் பட்லர் எச்சரிக்கப்பட்டு இருந்தால்.. நல்லது. அப்படி இல்லையென்றால் முதல் முறையாக அஸ்வின் தறிகெட்டு நடந்து கொண்டுள்ளார். இனிமேல், இது அடிக்கடி நடப்பதை நாம் பார்க்கலாம்." என கூறியுள்ளார்.

மோசமான செயல்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த "மிக மோசமான செயல், தவறான உதாரணம்" என குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, March 26, 2019, 15:43 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
RRvKXIP IPL 2019 : England players disappointed with Buttler’s run out by Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X