சிஎஸ்கேவின் 'எதிர்காலம்'.. மராத்தி நடிகையுடன் டேட்டிங்? - பற்ற வைத்த இன்ஸ்டா போஸ்ட்

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றால், அது ருதுராஜ் கெய்க்வாட் தான். இப்போது இவரைச் சுற்றி புது காதல் கதை கிசுகிசுக்கப்படுகிறது.

ஐபிஎல் 2021 தொடரின் பயோ-பபுளை மீறி, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட, பின் அடுத்தடுத்து பல்வேறு அணிகளின் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று பரவ, மறு தேதி குறிப்பிடாமல் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் எப்போதும் தொடர் துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, இந்த நிமிடம் வரை ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் எப்போது துவங்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

 இளம் வீரருக்கு வாய்ப்பு

இளம் வீரருக்கு வாய்ப்பு

துபாயில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மெகா தோல்விகளை சந்தித்தது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. 2008ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, தோனி தலைமையில் சிஎஸ்கே, பிளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது அதுவே முதன் முறை. ஆனால், சோகத்திலும் ஒரு நன்மையாக,தொடரின் கடைசி சில போட்டிகளில், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தோனி வாய்ப்பளித்தார்.

 பேட்டிங்கில் அசத்தல்

பேட்டிங்கில் அசத்தல்

அவர் எத்தனை ஆண்டுகள் பசியில் இருந்துருப்பாரோ தெரியவில்லை, அடுத்தடுத்து 3 போட்டிகளில் அரைசதம் அடித்து, தனது ஆளுமையை காண்பித்தார். இப்போது, 2021 சீசனிலும் அதகளப்படுத்திய ருதுராஜ், டு பிளசிஸ்ஸுடன் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால், சிஎஸ்கே இந்த சீசனில் தான் விளையாடிய 7 போட்டிகளில், 2ல் தோற்றாலும், 7 போட்டிகளிலும் பேட்டிங்கில் பிரமாதமாகவே செயல்பட்டது.

 டேட்டிங் உண்மையான?

டேட்டிங் உண்மையான?

இந்நிலையில், மராத்தி நடிகை சயாலி சஞ்சீவுடன் ருதுராஜ் டேட்டிங் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு சயாலியின் இன்ஸ்ட்டா போஸ்ட் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று, நடிகை சயாலி இன்ஸ்ட்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு, நம்ம ருதுராஜ், 'வாவ்' என்று பதில் அளித்துள்ளார். இதற்கு சயாலி, "ஹார்ட் எமோஜிஸ்' போட்டு ரிப்ளை கொடுக்க... இது போதாதா நம்ம நெட்டிசன்களுக்கு. பற்ற வைத்துவிட்டனர்.

 அமைதி காக்கும் ஜோடி

அமைதி காக்கும் ஜோடி

இருவரும் டேட்டிங் செல்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகளை வெளியாக, அந்த இளம் ஜோடியோ எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். நடப்பு சீசனில், 196 ரன்கள் எடுத்துள்ள ருதுராஜின் ஆவரேஜ் 28, இதில், இரண்டு அரைசதங்கள் அடங்கும். இன்றைய தேதிக்கு தோனியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ருதுராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ruturaj Gaikwad Dating Sayali Sanjeev - ருதுராஜ் கெய்க்வாட்
Story first published: Tuesday, May 18, 2021, 10:24 [IST]
Other articles published on May 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X