For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் அன்பை பெற்ற ருதுராஜ்... ரெய்னாவிற்கு பதிலாக விளையாட வாய்ப்பு

துபாய் : ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவந்த சுரேஷ் ரெய்னா அந்த அணியின் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த நிலையில் அவருக்கு பதில் தற்போது யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

IPL2020: ரெய்னாவுக்கு பதில் இவருக்கு வாய்ப்பு?

இந்நிலையில் ரெய்னாவிற்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அந்த அணியின் பயிற்சி ஆட்டங்களில் தோனியின் நன்மதிப்பை இவர் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, ரெய்னாவின் இழப்பு சிஎஸ்கேவிற்கு பெரும் இழப்புதான் என்று தெரிவித்துள்ள முன்னாள் வீரர்கள் சிவராமகிருஷ்ணன் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் ஆனால் அவரது இடத்தை ஈடுசெய்ய அணியில் பல வீரர்கள் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ரெய்னா இமேஜை கெடுக்க திட்டம்? எல்லாமே பொய்.. சிஎஸ்கே அணிக்கு எதிராக பொங்கி எழுந்த ரசிகர்கள்!ரெய்னா இமேஜை கெடுக்க திட்டம்? எல்லாமே பொய்.. சிஎஸ்கே அணிக்கு எதிராக பொங்கி எழுந்த ரசிகர்கள்!

போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா

போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணி பல்வேறு நெருக்கடிகளுக்கு கடந்த இரு தினங்களில் ஆளாகியுள்ளது. அந்த அணியின் இரு வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அந்த அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னாவும் சொந்த காரணங்களால் இந்த சீசனில் விளையாடாமல் நாடு திரும்பியுள்ளார்.

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ரெய்னா

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ரெய்னா

தோனிக்கு அடுத்ததாக அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்தார் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள முதல் வீரர் மற்றும் அதிக ரன்களை எடுத்துள்ள இரண்டாவது வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார் ரெய்னா. இந்நிலையில் அணியிலிருந்து இவர் விலகியுள்ளது சிஎஸ்கேவிற்கு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

சிவராமகிருஷ்ணன் ஆலோசனை

சிவராமகிருஷ்ணன் ஆலோசனை

ஆயினும் அணியில் 3வது இடத்தில் சாம் குர்ரானை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு அல்லது விஜய் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கலாம் என்றும் ருதுராஜ் அல்லது குர்ரான் 3வது இடத்தில் விளையாடலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அதிகமான அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ளதால் ரெய்னா வெளியேறியுள்ள இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே பதற்றப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோனியின் கவனத்தை பெற்ற வீரர்

தோனியின் கவனத்தை பெற்ற வீரர்

இதே கருத்தையே முன்னாள் பேட்ஸ்மேன் தீப் தாஸ்குப்தாவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரெய்னாவின் மிடில் ஆர்டர் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அந்த அணியின் பயிற்சி ஆட்டங்களின்போது அவர் தோனியின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனால் ரெய்னாவிற்கு பதிலாக அவருக்கு அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 14 நாட்களுக்கு பிறகு இவர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, August 31, 2020, 17:53 [IST]
Other articles published on Aug 31, 2020
English summary
The 23-year-old Gaikwad had impressed Dhoni during CSK's brief camp in the city
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X