For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்பா.. செம கம்பேக்.. என்னா அடி.. விமர்சனத்தை தூள் தூளாக்கிய இளம் வீரர்.. சி.எஸ்.கே.ஹேப்பி அண்ணாச்சி!

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவமாடி மீண்டும் பார்முக்கு திரும்பிய ருத்ராஜ் கெய்க்வாட் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

Recommended Video

Dhoni வெச்ச நம்பிக்கை Ruturaj Gaikwad விமர்சனங்களுக்கு செம்ம பதிலடி| Oneindia Tamil

கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐ.பி.எல்.லில் தனது ஆதிக்கத்தை கம்பீரமாக நிலைநாட்டி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஒரு போட்டிக்கே இப்படியா.. ஐதாராபாத் அணி இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் ரஷித் கான்.. அப்படி என்ன ஆனது? ஒரு போட்டிக்கே இப்படியா.. ஐதாராபாத் அணி இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் ரஷித் கான்.. அப்படி என்ன ஆனது?

சென்னையின் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட். 42 பந்துகளில் 62 ரன்கள் விளாசி அணிக்கு முக்கிய ஆணிவேராக விளங்கினார்.

ருத்ராஜ் கெய்க்வாட் மீது விமர்சனம்

ருத்ராஜ் கெய்க்வாட் மீது விமர்சனம்

இந்த ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் இருந்தே ரன்கள் எடுக்க ருத்ராஜ் கெய்க்வாட் சிரமப்பட்டு வந்தார். அதுவும் பஞ்சாப்புக்கு எதிரான குறைந்த வெற்றியை இலக்கை நோக்கி அவர் மோசமாகி ஆடி அவுட்டாகிய விதம் சென்னை ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. ''இவரை தூக்கி விட்டு புஜாராவுக்கு வாய்ப்பு கொடுங்கள்'' என்று ரசிகர்கள் கண்ணாபின்னா என்று திட்ட ஆரம்பித்தனர்.

அணி வைத்த நம்பிக்கை

அணி வைத்த நம்பிக்கை

இதனால் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளானார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் நீக்கப்படுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அணி நிர்வாகமும், கேப்டன் தோனியும் அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தனர். இதனை கொல்கத்த்தாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக செய்துள்ளார் ருத்ராஜ் கெய்க்வாட்.

விமரசனத்தை நொறுக்கினார்

விமரசனத்தை நொறுக்கினார்

42 பந்துகளில் 6 பவுன்டரி மற்றும் 4 சிக்சருடன் மரண அடி அடித்து எல்லா விமர்சகர்களின் வாயை மூடினார் ருத்ராஜ் கெய்க்வாட். அவர் அடித்தது எல்லாமே குட் கிரிக்கெட்டிங் ஷாட்கள். கெய்க்வாட் ஆட்டத்தை அணி வீரர்களும், தோனியும் வெகுவாக பார்த்து ரசித்தனர். இந்த ஆட்டம் முடிந்த பின்பு கூறிய ருத்ராஜ் கெய்க்வாட் '' அணியின் வெற்றிக்கு ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,. அணியின் பயிற்சியாளர் வீரர்கள் மற்றும் கேப்டன் தோனி என எல்லோரும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். எந்த பந்து வீச்சாளரை அடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் திட்டமிட்டு செயல்பட்டோம் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ரசிகர்கள் பாராட்டு மழை

ரசிகர்கள் பாராட்டு மழை

''ராக்கெட் ராஜாவிடமிருந்து( ருத்ராஜ் கெய்க்வாட்) ஒரு அதிரடியான அவருக்கு நேர்மறையை விதைக்கும் ஆட்டம் வெளிப்பட்டுள்ளது ''என்று சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிட்டரில் புகழ்ந்து தள்ளியது. மீண்டும் அதிரடிக்கு திரும்பியுள்ள கெய்க்வாட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகினறனர். பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி வைத்த நம்பிக்கை இறுதியில் நல்ல பலன்களை அறுவடை செய்துள்ளது என்று ரசிகர்கள் பாராட்டி வருகினறனர்.

Story first published: Thursday, April 22, 2021, 16:59 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
Rudraj Gaikwad who returned to form after scoring 64 in the match against Kolkata, has been showered with praise
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X