For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் போட்டியில ருதுராஜ் பங்கேற்பது கடினம்... சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அறிவிப்பு

துபாய் : கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதத்திலிருந்து குவாரன்டைனில் உள்ள சிஎஸ்கே அணியின் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நெகட்டிவ் ரிசல்ட் வந்தபோதிலும் பயிற்சிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐயின் மருத்துவ குழு அவரை பரிசோதனை செய்து கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக அவர் காத்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இப்ப என்ன பண்ணப் போறீங்க தோனி? சிஎஸ்கே அணிக்கு இப்படி ஒரு பலவீனம் இருக்கு.. அதிர வைத்த டீன் ஜோன்ஸ்இப்ப என்ன பண்ணப் போறீங்க தோனி? சிஎஸ்கே அணிக்கு இப்படி ஒரு பலவீனம் இருக்கு.. அதிர வைத்த டீன் ஜோன்ஸ்

தொடர் குவாரன்டைனில் ருதுராஜ்

தொடர் குவாரன்டைனில் ருதுராஜ்

ஐபிஎல் 2020 போட்டிகளுக்காக கடந்த 21ம் தேதி சிஎஸ்கே அணி வீரர்கள் துபாய் புறப்பட்டு சென்ற நிலையில், சில தினங்களிலேயே அணியின் வீரர்கள் தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் மற்ற 12 பேரும் நெகட்டிவ் ரிசல்ட் வந்து தங்களது பணிகளுக்கு திரும்பியுள்ள நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் இன்னும் குவாரன்டைனில் உள்ளார்.

பிட்னஸ் சர்ட்டிபிகேட் கட்டாயம்

பிட்னஸ் சர்ட்டிபிகேட் கட்டாயம்

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த இரண்டு கொரோனா டெஸ்ட்களில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ள போதிலும் பிசிசிஐயிடம் இருந்து கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் கிடைக்காததால் அவர் இன்னும் குவாரன்டைனில் உள்ளார். பிசிசியின் மருத்துவ குழுவினர் அவருக்கு இருதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு குறித்து பிட்னஸ் சர்ட்டிபிகேட் கொடுத்தால் மட்டுமே அவர் அடுத்தகட்டமாக பயிற்சிகளில் ஈடுபட முடியும்.

ருதுராஜ் பங்கேற்க மாட்டார்

ருதுராஜ் பங்கேற்க மாட்டார்

சிஎஸ்கே அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியுள்ள நிலையில், சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் கருதப்படுகிறார். ஆயினும் சிஇஓ காசி விஸ்வநாதன் இதை உறுதப்படுத்தவில்லை. இந்நிலையில் வரும் 19ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ருதுராஜ் பங்கேற்பது கடினம் என்று விஸ்வாதன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் வருவார்

இன்னும் சில தினங்களில் வருவார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கெய்க்வாடுக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும், அவர் மிகவும் சிறப்பான உடல்நிலையுடன் உள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவர் அணியின் பாதுகாப்பு வளையத்திற்குள் இன்னும் சில தினங்களில் வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, September 16, 2020, 18:38 [IST]
Other articles published on Sep 16, 2020
English summary
CSK CEO Kasi Visvanathan said the BCCI medical team are yet to clear Ruturaj for training
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X