மூச்சை எவ்வளவு நேரம்யா பிடிச்சு வைப்பீங்க... ஹர்பஜன்சிங்கை கலாய்த்த துவக்க வீரர்

டெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் யோகா செய்து இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஹர்பஜன் சிங்கின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். சக வீரர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடிப்பீர்கள், அதை வெளியில் விடுங்கள் என்று இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங்கை கலாய்த்துள்ளார்.

5 மாசமா இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை பார்க்கலை.. சிறப்பு அனுமதி வாங்கிய பாக். கிரிக்கெட் வீரர்!

பிரபலங்களின் யோகா

பிரபலங்களின் யோகா

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தனியாகவும் தங்களது குடும்பத்தினருடனும் சேர்ந்து யோகா செய்து அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் யோகா செய்து அதன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அனைத்திற்கும் விடை

அனைத்திற்கும் விடை

ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர், அவருடைய மனைவி கீதா பஸ்ரா மற்றும் மகள் ஹினாயா யோகா செய்தபடி உள்ளனர். அனைத்திற்குமான விடையாக யோகா உள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் யோகாதினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் இந்த புகைப்படத்திற்கு ஹர்பஜன் சிங் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

கலாய்த்த ரோகித் சர்மா

கலாய்த்த ரோகித் சர்மா

இந்த புகைப்படத்திற்கு ஹர்பஜன் சிங்கின் ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த யோகா புகைப்படத்தையொட்டி அவரை கலாய்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவும் களமிறங்கியுள்ளார். முகத்தை ஸ்டிப்பாக வைத்திருந்த அவரை, 'மூச்சை வெளியில் விடுங்கள் பாஜூ பா' என்று ரோகித் கமெண்ட் செய்துள்ளார்.

ஐபிஎல்-ஐ விட்டு போகும் போது கில்கிறிஸ்ட் செய்த காரியம்
யோகாதான் வாழ்க்கை

யோகாதான் வாழ்க்கை

இந்நிலையில் தன்னுடைய கணவர் ஹர்பஜன் சிங்குடன் தான் மேற்கொண்ட யோகாவை வீடியோவாக வெளியிட்டுள்ளார் கீதா பஸ்ரா. இந்த வீடியோவிற்கு யோகாதான் வாழ்க்கை என்று ஹர்பஜன் சிங் கமெண்ட் செய்துள்ளார். மேலும் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷாவும் இந்த பதிவை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Harbhajan Singh celebrated International Yoga Day and posted a picture of his family doing yoga
Story first published: Sunday, June 21, 2020, 18:03 [IST]
Other articles published on Jun 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X