For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்.சி.ஏவின் கவனக்குறைவு.. இந்தியாவுக்கு எமனாக வந்த ஃபிட்னஸ் பிரச்சினை.. சாபா கரீம் கடும் விளாசல்!

மும்பை: தேசிய கிரிக்கெட் அகாடமியின் தவறுகளால் தான் இந்திய அணி மோசமாக செயல்பட்டு வருவதாக முன்னாள் வீரர் சாபா கரீம் விளாசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சொதப்பிய இந்திய அணி, தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் டி20 தொடரை கைப்பற்றிய போதும், ஒருநாள் தொடரில் சொதப்பி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த சூழலில் 2வது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்துசூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்து

 உலகக்கோப்பைக்கான ஏற்பாடு

உலகக்கோப்பைக்கான ஏற்பாடு

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ள போதும், பவுலிங் படை சற்று கவலை அளிக்கிறது. முன்னணி வீரர்கள் பலரும் காயத்தின் காரணமாக விலகியதால், அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தவித்து வருவது தெளிவாக தெரிகிறது.

பும்ராவின் முதுகுவலி

பும்ராவின் முதுகுவலி

முன்னணி பவுலரான ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முதுகுவலியில் இருந்து குணமடையவில்லை. இதே போல பிரஷித் கிருஷ்ணா, யாஷ் தயால் போன்றவர்களும் காயமடைந்துள்ளனர். தீபக் சஹார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் சமீபத்தில் தான் குணமடைந்து வந்த சூழலில் இருவரின் உடற்தகுதி மீண்டும் கேள்விக்குறியாக உள்ளது.

சாபா கரீம் சாடல்

சாபா கரீம் சாடல்

இந்நிலையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி என்னதான் செய்கிறது என சாபா கரீம் கேட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது என்.சி.ஏவின் பணிகள் ஆகும். அணி நிர்வாகம், தேர்வுக்குழு, கேப்டன்களுடன் சேர்ந்து என்.சி.ஏ அதிகாரிகள் தான் ஒரு 10 - 12 வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை தொடர்ந்து தயார் செய்து, சரியான உடற்தகுதியிலேயே வைத்திருக்க வேண்டும்.

4 சூப்பர் வீரர்கள்

4 சூப்பர் வீரர்கள்

அணிக்கு தேவை என்ற சூழலில் வீரர்களை முழு ஃபிட்னஸுடன் என்.சி.ஏ அனுப்ப வேண்டும். ஆனால் அந்த பணியை செய்யவில்லை. 140க்கு மேல் வீசக்கூடிய இளம் பவுலர்கள் இருக்கின்றனர். ஷிவம் மாவி, கார்த்திக் தியாகி,குல்தீப் சென், ஆவேஷ் கான் போன்றவர்கள் உள்ளூர் போட்டிகளில் 140கிமீ வேகத்தில் வீசுகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து தயார் படுத்த வேண்டும் என சாபா கரீம் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 28, 2022, 18:25 [IST]
Other articles published on Nov 28, 2022
English summary
Saba karim slams NCA for Team India's fast bowlers got a fitness issue, ahead of bangladesh series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X